புதுச்சேரி : உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் எனஇந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் அரசை வலியுறுத்தியுள்ளது.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின், வில்லியனூர் கொம்யூன் கமிட்டி பேரவை கூட்டம் கரிக்கலாம்பாக்கத்தில் நடந்தது. கூட்டத்திற்கு, சங்கத்தின் மாநில செயலாளர் சஞ்சய்சேகரன், பொருளாளர் ரஞ்சித்குமார் துவக்கவுரை ஆற்றினர். இதில்,அழகானந்தம், ராகுல்காந்தி, தேவமுருகன், மகிழன், ஜான் மேத்யூ ஆகியோர் அடங்கிய 5 பேர் கொண்ட கமிட்டியின் ஒருங்கிணைப்பு குழு தேர்வு செய்யப்பட்டனர்.
கூட்டத்தில், மத்திய, மாநிலகள்அரசின் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும்.புதுச்சேரியில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கிட வேண்டும். வில்லியனுார் பகுதியில் இயங்கும் தொழிற்சாலைகளில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளித்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.