/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நிதி நிறுவனத்தில் முதலீடு செய்வதாக ரூ.22 லட்சம் மோசடி : தம்பதிக்கு வலை
/
நிதி நிறுவனத்தில் முதலீடு செய்வதாக ரூ.22 லட்சம் மோசடி : தம்பதிக்கு வலை
நிதி நிறுவனத்தில் முதலீடு செய்வதாக ரூ.22 லட்சம் மோசடி : தம்பதிக்கு வலை
நிதி நிறுவனத்தில் முதலீடு செய்வதாக ரூ.22 லட்சம் மோசடி : தம்பதிக்கு வலை
ADDED : செப் 01, 2025 11:08 PM
புதுச்சேரி: தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து தருவதாக கூறி ரூ.22.58 லட்சம் மோசடி செய்த தம்பதியை போலீசார் தேடி வருகின்றனர்.
சேதராப்பட்டு, மேட்டு தெருவை சேர்ந்தவர் வள்ளி,39; தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். அதே கம்பெனியில் வேலை செய்து வந்த திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்துார், வேடந்தவாடியை சேர்ந்த மணிகண்டன், அவரது மனைவி செல்வகுமாரி ஆகியோர் ஐ.எப்.எஸ்., என்ற தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து வருவதாகவும், வள்ளியையும் அதில் முதலீடு செய்யும்படி ஆசை வார்த்தை கூறினர்.
அதன்படி, வள்ளி பல்வேறு வங்கிகளில் கடன் பெற்று, கடந்த 2022ம் ஆண்டு மே முதல் ஜூலை மாதம் வரை ரூ. 23 லட்சத்து 46 ஆயிரத்தை மணிகண்டனிடம் கொடுத்தார். பின்னர், தனது முதலீட்டிற்கான நிதி நிறுவனத்தின் உறுதிமொழி பத்திரம் அல்லது ரசீது கேட்டபோது, இரண்டு மாதத்தில் தருவதாக மணிகண்டன் கூறினார். இந்நிலையில் நிதி நிறுவனம் மூடப்பட்டதாக தகவலறிந்து அதிர்ச்சி அடைந்த வள்ளி, முதலீடு செய்ய தான் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டதும், மணிகண்டன் ரூ. 88 ஆயிரத்தை வள்ளியின் வங்கி கணக்கிற்கு அனுப்பினார். மீதமுள்ள 22 லட்சத்து 58 ஆயிரம் ரூபாயை கொடுக்காமல் காலம் கடத்தி வந்தார்.
இதுகுறித்து வள்ளி அளித்த புகாரின் பேரில், சேதராப்பட்டு போலீசார் மணிகண்டன் அவரது மனைவி செல்வகுமாரி ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.