ADDED : ஜன 21, 2026 05:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர்: ஏம்பலத்தை சேர்ந்தவர் குமரேசன் 65; இவர் கடந்த 19ம் தேதி காலை தனது மனைவி அன்னம் 58; என்பவரை, ஆக்டிவா ஸ்கூட்டரில் அழைத்து கொண்டு திருவந்திபுரம் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார்.
விழுப்புரம் - நாகப்பட்டினம் புறவழிச்சாலை, பாகூர் மேம்பாலத்தில் சென்றபோது, பின்னால் வந்த மாருதி எர்டிகா கார், ஸ்கூட்டர் மீது மோதியது. குமரேசன், அன்னம் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
பிள்ளையார்குப்பம் தனியார் மரத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

