/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'தினமலர்-பட்டம்' வினாடி வினா போட்டி
/
'தினமலர்-பட்டம்' வினாடி வினா போட்டி
ADDED : ஜன 20, 2026 06:11 AM

புதுச்சேரி: கொம்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்த 'தினமலர்- பட்டம்' வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
கொம்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 'தினமலர் -பட்டம்' நாளிதழின் வினாடி வினா போட்டி நடந்தது. இதில் பள்ளியை சேர்ந்த 8 அணிகள் பங்கேற்றன.இந்த போட்டியில், 8 ம் வகுப்பு மாணவிகள் அக்ஷ்யா, தேஷிகா முதலிடத்தையும், மாணவிகள் சரோஜினி பிரியதர்ஷினி, முகிலரசி 2ம் இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர்.
இதையடுத்து, பட்டம் வினாடி வினா இறுதி போட்டிக்கு தேர்வான மாணவிகளை பள்ளியின் தலை ஆசிரியர்கள் குணாசுந்தரி, சுவாமிராஜ் ஆகியோர் பாராட்டி பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கினர்.
இதில், பொறுப்பாசிரியர் பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

