/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாமூல் கேட்டு ஒப்பந்ததாரரை தாக்கிய தம்பதிக்கு வலை
/
மாமூல் கேட்டு ஒப்பந்ததாரரை தாக்கிய தம்பதிக்கு வலை
ADDED : ஏப் 18, 2025 04:17 AM
புதுச்சேரி: பந்தல் போடும் தொழலாளரை தாக்கிய தம்பதியினரை போலீசார் தேடி வருகின்றனர்.
காலாப்பட்டு சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் சுரேஷ் 41, திருவிழாக்களில் பந்தல் போடும் ஒப்பந்ததாரர். கடந்த மாதத்தில் அப்பகுதியில் உள்ள கந்துருத்தி அம்மன் கோவிலில் பந்தல் போடும் ஒப்பந்தம் பெற்றிருந்தார். அவரிடம் அதே பகுதியை சேர்ந்த வேலு ரூ.10 ஆயிரம் கொடுத்தால் வேலையை பார்க்கலாம் என பணம் கேட்டு மிரட்டினார்.
இந்நிலையில் சம்பவத் தன்று காலாப்பட்டு கடற்கரையோரம் சுரேஷ் மீன் வாங்க சென்றார். அங்கு அவருக்கு தெரிந்த முரளி என்பவரிடம் வேலு, அவரது மனைவி அபிராமி ஆகியோர் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தனர். இதனை பார்த்த சுரேஷ் சமாதனம் செய்தார். இதில் ஆத்திரமடைந்த முரளி, அவரது மனைவி அபிராமி ஆகியோர் சுரேஷின் கண்ணத்தில் தாக்கினர். இதையடுத்து அங்கிருந்தைவர்கள் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சுரேஷ் கொடுத்த புகாரின் பேரில், காலாப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து தம்பதியை தேடிவருகின்றனர்.

