/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாஜி அரசு ஊழியரை தாக்கிய தம்பதிகளுக்கு வலை
/
மாஜி அரசு ஊழியரை தாக்கிய தம்பதிகளுக்கு வலை
ADDED : நவ 08, 2025 01:35 AM
அரியாங்குப்பம்: மாஜி அரசு ஊழியரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த இரு தம்பதிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
நோணாங்குப்பம் தெற்கு வீதியில் நேற்று முன்தினம் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியை மேற்கொண்ட ஓட்டுச்சாவடி அலுவலர், அதே தெருவை சேர்ந்த மாஜி அரசு ஊழியரான பூபாலன்,60; என்பவரிடம் இரு பெயர்களை கூறி இங்கு வசிக்கின்றனரா என விசாரித்துவிட்டு சென்றார்.
சற்று நேரத்தில் அங்கு வந்த அதேப் பகுதியை சேர்ந்த நடராஜன்,56, அவரது மனைவி புட்லாயி அம்மன்; முருகன்,45, அவரது மனைவி சத்யா,36, ஆகிய 4 பேரும் சேர்ந்து எப்படி எங்களை தெரியாது எனக் கூறலாம் எனக் கேட்டு, பூபாலனை ஆபாசமாக திட்டி தாக்கினர். தடுக்க முயன்ற அவரது மகன் ஸ்ரீராமையும் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, நடராஜன் உள்ளிட்ட 4 பேரை தேடி வருகின்றனர்.

