/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மின்துறை செலவை குறைக்க குழு மக்கள் முன்னேற்ற கழகம் யோசனை
/
மின்துறை செலவை குறைக்க குழு மக்கள் முன்னேற்ற கழகம் யோசனை
மின்துறை செலவை குறைக்க குழு மக்கள் முன்னேற்ற கழகம் யோசனை
மின்துறை செலவை குறைக்க குழு மக்கள் முன்னேற்ற கழகம் யோசனை
ADDED : நவ 08, 2025 01:35 AM
புதுச்சேரி: மின்துறையின் செலவை குறைப்பது குறித்து ஆலோசிக்க குழு அமைக்க வேண்டும் என, புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:
சமீபத்திய மின் கட்டண உயர்வு நியாயமற்றது. மின்துறையில் வருவாயை விட செலவு கூடுதலாக இருப்பதால் கட்டண உயர்வின் மூலம் சரி செய்வதாக கூறப்படுகிறது. இந்த நிதியாண்டில் ரூ.2,409.74 கோடி செலவீனமாகவும், ரூ.2,358.36 கோடி வருவாயாக இருக்கும் என, ஆணையம் மதிப்பிட்டுள்ளது.
இதனால் ஏற்படும் ரூ.51.38 கோடி வருவாய் பற்றாக்குறையை ஈடு செய்ய ஆணையம் கட்டண உயர்வை பரிந்துரைத்துள்ளது.
மக்களை தொந்தரவு செய்யாமல் இந்த ரூ.51.38 கோடி பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான வழிகளை கவனத்தில் கொள்ள அரசு தவறிவிட்டது. கடந்த 2025---26ம் ஆண்டு பட்ஜெட்டில், இந்த தொகையை மானியமாக வழங்கியிருக்கலாம்.கடந்த கால இழப்புகளைமீட்டெடுக்கவும், அன்றாட செலவுகளை நிர்வாகிக்கவும் ஒழுங்குமுறை கட்டணமாக ரூ.238 கோடி வசூலிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
முந்தைய ஆண்டுகளின் இழப்பை இப்போது உள்ள நுகர்வோர்கள் மீது சுமத்துவது நியாயமற்றது.
மின்துறைக்கு வரவேண்டிய ரூ.500 கோடி நிலுவைத் தொகையை வசூலிக்க வேண்டும். மின்துறையின் செலவைக் குறைப்பது குறித்து ஆலோசனை வழங்க தொழில்நுட்ப நிபுணர்கள் குழுவைஅமைக்க வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

