/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஓடையில் சிக்கிய பசுமாடு மீட்பு
/
ஓடையில் சிக்கிய பசுமாடு மீட்பு
ADDED : ஜன 30, 2026 05:12 AM
பாகூர்: கிருமாம்பாக்கம் அருகே ஓடையில் சிக்கி வெளியேற முடியாமல் தவித்த பசு மாட்டை, தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
கிருமாம்பாக்கம் அடுத்த ரெட்டிச்சாவடி, செங்கை நகரை சேர்ந்தவர் பாலு மனைவி சுகுமாரி, 50. இவர், வீட்டில் இரண்டு பசு மாடுகளை வளர்த்து வருகிறார்.
சுகுமாரி நேற்று காலை இரண்டு மாடுகளையும், ரெட்டிச்சாவடி எல்லையி ல் உள்ள ஓடை அருகே கயிறு மூலம் கட்டி மேய்ச்சலுக்கு விட்டு இருந்தார்.
மாலை 4:00 மணியளவில், சுகுமாரி சென்று பார்த்தபோது, ஒரு மாடு மட்டும் ஓடையில் சேற்றில் சிக்கி வெளியேற முடியாமல் தவித்து கொண்டிருந்தது.
அப்பகுதி மக்கள் மாட்டினை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த பாகூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி பசுமாட்டை பத்திரமாக மீட்டனர்.

