ADDED : டிச 04, 2024 05:27 AM
திருக்கனுார்:திருக்கனுார் பகுதிகளில் கனமழைக்கு 2 மாடுகள், கன்று குட்டி இறந்தன.
பெஞ்சல் புயல் காரணமாக கடந்த சில தினங்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு பகுதிகளில் ஆடு, மாடுகள் இறந்து வருகின்றன.
திருக்கனுார் அடுத்த மண்ணாடிப்பட்டை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மாடு குளிர் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் இறந்தது.
மாட்டு கொட்டகைகளில் தண்ணீர் தேங்கி, மண்ணாடிப்பட்டு பெரிய பேட்டை சேர்ந்த நிர்மலா என்பவரது பசுமாடு, குமாரப்பாளையத்தை சேர்ந்த பத்மா என்பவரது கன்று குட்டி இறந்தன.
எனவே, புதுச்சேரி அரசு கால்நடை பராமரிப்பு துறை, மருத்துவர் குழுவை உடனடியாக மழை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி, கால்நடை மருத்துவ முகாம் நடத்தவும், நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.