/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தெருக்களில் திரியும் மாடுகளால் பொதுமக்களுக்கு... அச்சுறுத்தல்; வேடிக்கை பார்க்கும் நகராட்சிகள் மீது அதிருப்தி
/
தெருக்களில் திரியும் மாடுகளால் பொதுமக்களுக்கு... அச்சுறுத்தல்; வேடிக்கை பார்க்கும் நகராட்சிகள் மீது அதிருப்தி
தெருக்களில் திரியும் மாடுகளால் பொதுமக்களுக்கு... அச்சுறுத்தல்; வேடிக்கை பார்க்கும் நகராட்சிகள் மீது அதிருப்தி
தெருக்களில் திரியும் மாடுகளால் பொதுமக்களுக்கு... அச்சுறுத்தல்; வேடிக்கை பார்க்கும் நகராட்சிகள் மீது அதிருப்தி
ADDED : நவ 22, 2025 05:35 AM

புதுச்சேரி: சாலையில் சுற்றித் திரியும் மாடுகள் விஷயத்தில் நகராட்சிகள் மெத்தமான இருப்பதுபொதுமக்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் தற்போது தெருவுக்கு தெரு மாடுகள் தொல்லை அதிகரித்துள்ளது. சாலையில் திடீரென குறுக்கே புகும் மாடுகளால் அடிக்கடி விபத்துகளும், உயிரிழப்புகளும் அரங்கேறி வருகிறது.
தினமும் ஒரே இடத்தில் நிற்கும் மாடுகள், சாலையில் செல்லும் பொதுமக்களை முரட்டுத்தனமாக முட்டி தள்ளும் அளவிற்கு நிலைமை மோசமாகிவிட்டது. இ.சி.ஆர்., கொக்கு பார்க் சந்திப்பில் இந்த சம்பவம் அரங்கேறி, சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது.
சாலைகள் மட்டுமின்றி பொதுமக்கள் வாங்கிங் செல்லும் இடங்களிலும் சகட்டுமேனிக்கு மாடுகள் அச்சுறுத்தும் வகையில் சுற்றித் திரிகின்றன.
குறிப்பாக, லாஸ்பேட்டை ெஹலிபேடு மைதானத்தை சுற்றி ஏராளமான பொதுமக்கள் காலையிலும், மாலையிலும் வாங்கிங் செல்கின்றனர். மைதானத்தை சுற்றியுள்ள இடங்களில் பள்ளி மாணவர்களும் ஸ்கேட்டிங் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். சிறுவர், சிறுமிகள் விளையாடுவதற்காக வருகின்றனர்.
இங்கு கும்பல் கும்பலாக சுற்றித் திரியும் மாடுகளால் மாணவர்கள், பொதுமக்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் ஏற்பட்டு வருகிறது. வாக்கிங் செல்பவர்களை மாடுகள் முட்ட பாய்கின்றன. இந்த அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாடுகளை பார்த்து பொதுமக்கள் சிதறி ஓடுகின்றனர்.
புகார் வந்த பிறகு ஒவ்வொரு முறையும் நகராட்சிகள் மாடுகளை பிடித்து அபராதம் போடுவதும், அதன் பிறகு சில நாட்களில் மீண்டும் அதே மாடுகள் அச்சுறுத்தும் வகையில் சாலையில் திரிவதும் வாடிக்கையாகி விட்டது.
சட்ட விரோதம் தேசிய நெடுங்சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை பிடித்து அகற்ற வேண்டும் என அண்மையில் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இருந்தும்கூட புதுச்சேரி சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்கும் விஷயத்தில் நகராட்சிகள் மெத்தனமான இருப்பது பொதுமக்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் மாடுகள் வளர்ப்பதாக இருந்தால் நகராட்சியிடம் உரிமம் பெற வேண்டும். சொந்த இடம் இருந்தால் மட்டுமே மாடுகள் வளர்க்க முடியும்; அப்போதுதான் அதற்கான உரிமமும் கிடைக்கும்.
ஆனால் மாடுகளை சாலையில் திரிய விடுபவர்கள், நகராட்சிகளிடம் எந்த உரிமமும் பெறுவதில்லை. அவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க நகராட்சிகளுக்கு என்ன தயக்கம்?
மாடுகள் முட்டி, குறுக்கே புகுந்து யாராவது உயிரிழந்தால் அந்த குடும்பத்திற்கு யார் பொறுப்பு ஏற்பது... அந்த குடும்பத்திற்கு கால்நடை வளர்ப்போர் இழப்பீடு வழங்குவார்களா அல்லது உள்ளாட்சி அமைப்புகள் இழப்பீடு தர முன் வருமா... அப்படி இருக்கும்போது சாலையில் சுற்றி திரியும் மாடுகளை கட்டுப்படுத்தும் விஷயத்தில் உறுதியான நடவடிக்கை எடுக்காமல் உள்ளாட்சி அமைப்புகள் வேடிக்கை பார்ப்பது ஏன்...
தெரிந்தே செய்கின்றனர் மாடுகளை வளர்ப்போர் தங்களது மாடுகளை சாலைகள் மற்றும் பொது இடங்களில் திரிய விடக் கூடாது. சுகாதாரமான முறையில் தங்களுக்கு சொந்தமான இடத்தில் மட்டுமே வளர்க்க வேண்டும். தவறினால் மாடுகள் பிடிக்கப்பட்டு அபராதம் விதிக்க புதுச்சேரி நகராட்சிகள் சட்டத்தில் இடம் உண்டு.
முதல் முறையாக மாடுகள் சிக்கினால் 3 ஆயிரம் ரூபாய், இரண்டாவது மு றையாக சிக்கினால் இரட்டிப்பு அபராதம் விதிக்கலாம். தொடர்ந்து கால்நடைகளை வீதியில் திரியவிட்டால் மாடுகளில் உரிமையாளர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு குற்றவியல் நடவடிக்கை எடுக்கலாம்.
கால்நடை உரிமையாளர்களை அழைத்து பல முறை புதுச்சேரி நகராட்சியும், உழவர்கரை நகராட்சி எச்சரித்தாகி விட்டது. ஆனால் அவர்கள் நகராட்சியின் அறிவுறுத்தல்களை கண்டுக்கொள்ளுவதே இல்லை. தெரிந்தே தான் சாலைகளில் மாடுகளை திரிய விடுகின்றனர்.
இனி, சாலையில் திரியும் கால்நடைகளை பறிமுதல் செய்தால் மட்டுமே தீர்வு கிடைக்கும். அத்துடன் சமூக பொறுப்பு இல்லாமல் கால்நடைகளை சாலையிலும், பொது இடங்களில் திரிய விடும் அதன் உரிமையாளர்கள் மீது போலீசில் நகராட்சிகள் புகார் அளித்து குற்றவியல் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே நிரந்தர தீர்வு கிடைக்கும் .

