/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தட்சசீலா பல்கலை., பட்டமளிப்பு விழா
/
தட்சசீலா பல்கலை., பட்டமளிப்பு விழா
ADDED : நவ 21, 2025 07:09 AM
புதுச்சேரி: ஓங்கூர் தட்சசீலா பல்கலைக்கழக முதல் பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக கருத்தரங்கம் கூடத்தில் நடந்தது.
விழாவிற்கு, தட்சசீலா பல்கலைக்கழகம் வேந்தரும், மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவருமான தனசேகரன் தலைமை தாங்கினார். பதிவாளர் செந்தில் வரவேற்றார். துணைவேந்தர் விவேக் இந்தர் கோச்சர் ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினராக பிஜி குடியரசின் உயர் கமிஷனர் ஜகந்நாத் சாமி பங்கேற்று பேசுகையில், இந்தியா - பிஜி உறவுகள் பல துறைகளில் வலுபெற்று வருகிறது. குறிப்பாக டிஜிட்டல் கல்வி, புதுப்பிக்கத்தக்க ஆற்றல், சுகாதார அறிவியல், தொலை மருத்துவம் போன்ற துறைகளில் அதிகரித் துள்ளது' என்றார்.
தட்சசீலா பல்கலைக்கழக வேந்தர் தனசேகரன், 153 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி, பேசுகையில், 'மகாத்மா காந்தியின் அகிம்சா,தத்துவம், உலகளாவிய கல்வி முயற்சிகள் மற்றும் பத்மஸ்ரீ பி.டி. உஷாவின் சாதனைகளை பாராட்டினார்.
டாக்டர் ஜெயமோகனின் எழுத்துகள் எனக்கு வாழ்வில் வழிகாட்டியது. பல்கலைக்கழகத்தின் 'நாளைய தலைவர்களை' உருவாக்கும் குறிக்கோளை உறுதிப்படுத்தி, பட்டதாரிகளுக்கு துணிச்சலான இலக்குகள் அமைத்து, வாழ்வில் துாய நோக்கங்கள், ஒழுங்கான பழக்கங்கள், பெற்றோரின் ஆசீர்வாதம் போன்றவற்றை மதித்து செயல்பட வேண்டும்' என்றார். 17 பேர் தங்கப்பதக்கம் பெற்றனர். 104 பேர் முதல் வகுப்பு மாணவர்கள் ஆகும்.
விழாவில், முதன்மை விருந்தினர் நோபல் அமைதி பரிசு பெற்ற லெய்மா க்போவி, சார்பு வேந்தர்கள் நிலா பிரியதர்ஷினி, ராஜாராஜன், கவுரவ துணை வேந்தர் ரங்கநாதன், தேர்வு கட்டுப்பாளர் கோபாலகிருஷ்ணன் , கல்வி அலுவல்கள் டீன் சுப்ரமணியன், நிர்வாகம், தரம் மற்றும் அங்கீகாரங்கள் டீன் சீதாராமன், கலை மற்றும் அறிவியல் டீன் தீபா, அறிவியல் மற்றம் தொழில்நுட்ப டீன் சுபலட்சுமி, இணை பதிவு அலுவலர் ராமலிங்கம், நிதி அலுவலர் கிருஷ்ணமோகன் கலந்து கொண்டனர். பல்கலைக்கழக விளையாட்டு வளாகத்தை நோபல் அமைதி பரிசு பெற்ற லெய்மா க்போபி, பிஜி குடியரசின் உயர் கமிஷனர் ஜகந்நாத்சாமி, இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷா, எழுத்தாளர் ஜெயமோகன் திறந்து வைத்தனர்.
தேர்வு கட்டுப்பாட்டாளர் கோபாலக்கண்ணன் நன்றி கூறினார்.

