தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/செஞ்சி சிறுமி மாயமான விவகாரம்: முடிவுக்கு வராத சி.பி.சி.ஐ.டி., விசாரணை

செஞ்சி சிறுமி மாயமான விவகாரம்: முடிவுக்கு வராத சி.பி.சி.ஐ.டி., விசாரணை

செஞ்சி சிறுமி மாயமான விவகாரம்: முடிவுக்கு வராத சி.பி.சி.ஐ.டி., விசாரணை


ADDED : நவ 04, 2026 03:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 04, 2026 03:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி கிராமத்தில் 7 வயது சிறுமி ஹேமலதா காணாமல் போன வழக்கில், சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணையை துவங்கி, 13 நாட்கள் கடந்தும் எவ்வித தகவலும் வெளியாகவில்லை.

சிறுமி காணாமல் போன வழக்கு கடந்த அக்., மாதம் 21 ம் தேதி சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்ட நிலையில், 22ம் தேதி முதல் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையை மூன்று நாட்களில் முடிவை அறிவிப்பதாக சி.பி.சி.ஐ.டி., போலீசார் தெரிவித்திருந்தனர். ஆனால் 13 நாட்களை கடந்தும் எந்த முடிவும் அறிவிக்கப்படாதது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சி.பி.சி.ஐ.டி., டி.எஸ்.பி.,க்கள் வேல்முருகன், கீதா, ஆய்வாளர் ரேவதி உள்ளிட்ட போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். சந்தேகத்தின் அடிப்படையில் குற்றப்பின்னணி கொண்டவர்கள், அவர்களது நண்பர்கள், சிறுமியின் குடும்பத்தினர், பூசாரிகள், கோவில் சாமியார்கள் என பல்வேறு தரப்பினரிடம் விசாரணை செய்தும் ஒரு தடயமும் சிக்கவில்லை

சிறுமி என்ன ஆனார், எங்கு இருக்கிறார், அவருக்கு என்ன ஆனது என்பது குறித்த எந்தத் தகவலும் இதுவரை வெளியாகவில்லை. விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாதது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தாய் கோரிக்கை



காலதாமதத்தை தவிர்த்து, சிறுமி ஹேமலதாவை விரைவில் கண்டுபிடித்து தர வேண்டும் என தாய் பவானி கோரிக்கை விடுத்துள்ளார். இது வரை என்ன நடந்தது என்பதை வெளிப்படையான அறிக்கை மூலம் சி.பி.சி.ஐ.டி., போலீசார் பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us