தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/'விலை உயர்வை கட்டுப்படுத்த சட்டம் இயற்ற வேண்டும்'

'விலை உயர்வை கட்டுப்படுத்த சட்டம் இயற்ற வேண்டும்'

'விலை உயர்வை கட்டுப்படுத்த சட்டம் இயற்ற வேண்டும்'


UPDATED : நவ 04, 2026 11:53 AM

ADDED : நவ 04, 2026 11:49 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 04, 2026 11:53 AM ADDED : நவ 04, 2026 11:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்: விழுப்புரத்தில் இந்திய கம்யூ., மாநில செயலாளர் வீரபாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:

அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பண்டிகை காலத்தில் மக்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர்.

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு அதற்கான சட்டம் இயற்ற வேண்டும். மாநில அரசும் கூடுதல் கவனம் செலுத்தி, விலை உயர்வைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.

குழந்தைகள் காணாமல் போகும் நிகழ்வுகள் தொடராமல் தடுக்க, காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர் தனி கவனம் செலுத்த வேண்டும். பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் கட்டக் கூடாது.

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியான வுடன், கம்யூ., கட்சிகள் ஒன்று கூடி தனது முடிவை அறிவிக்கும். தமிழக அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால், இந்திய கம்யூ., அந்த நேரத்தில் தனது முடிவை எடுக்கும்.

இவ்வாறு வீரபாண்டியன் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us