UPDATED : நவ 27, 2026 05:46 PM
ADDED : நவ 27, 2026 05:46 PM

புதுச்சேரி: டெங்குவை கட்டுப்படுத்தாத அரசை கண்டித்து, மா.கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
புதுச்சேரி காமராஜர் சிலை எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மா.கம்யூ, நகர செயலாளர் ஜோதிபாசு தலைமை தாங்கினார். சி.பி.எம்., மாநில செயலாளர் ராமச்சந்திரன், மூத்த தலைவர் முருகன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பெருமாள், கொளஞ்சியப்பன், சத்தியா, மாநில குழு உறுப்பினர்கள் சரவணன், ஆனந்த், சஞ்சய், ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களிலும் டெங்கு தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். தனியாரிடம் ஒப்படைக்கப்பட்ட குப்பை அள்ளும் ஒப்பந்தத்தை ரத்து செய்து, உள்ளாட்சி அமைப்புகள் மூலமே துாய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும். டெங்கு பாதிப்பு, மருத்துவமனை அனுமதி மற்றும் உயிரிழப்பு விவரங்களை வெளிப்படையாக வெளியிட்டு, அதிக பாதிப்புள்ள பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
