UPDATED : நவ 26, 2026 09:56 PM
ADDED : நவ 26, 2026 09:56 PM
அ நிறம் | அளவு
நெட்டப்பாக்கம்: ஓசியில் மதுபானம் தராததால் காசாளரை தாக்கி மண்டையை உடைத்த வாலிபரை போலீசார் தேடிவருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் பட்டரைபாதி பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் இளையராஜா, 42; இவர் புதுச்சேரி மடுகரை பகுதியில் உள்ள ஒரு தனியார் மதுபான கடையில் காசாளராக உள்ளார். இந்த மதுபான கடைக்கு கடந்த 22ம் தேதி இரவு 7 மணிக்கு வந்தத சொக்கம்பட்டு பகுதியைச் சேர்ந்த சிவனேசன், 27; என்பவர் மதுபானம் வாங்கி கொண்டு பணம் கொடுக்கவில்லை. பணம் கேட்ட இளையராஜவை அங்கிருந்த பாட்டிலால் தலையில் தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த இளையராஜா மதகடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இளையராஜா புகாரின் பேரில் மடுகரை போலீசார் வழக்குப் பதிந்து வாலிபரை தேடி வருகின்றனர்.
