/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குளூனி மேல்நிலைப் பள்ளியில் கைவினை பொருள் கண்காட்சி
/
குளூனி மேல்நிலைப் பள்ளியில் கைவினை பொருள் கண்காட்சி
குளூனி மேல்நிலைப் பள்ளியில் கைவினை பொருள் கண்காட்சி
குளூனி மேல்நிலைப் பள்ளியில் கைவினை பொருள் கண்காட்சி
ADDED : ஜன 11, 2026 05:34 AM

புதுச்சேரி: புதுச்சேரி புனித சூசையப்பர் குளுனி மேல்நிலைப் பள்ளியில் கைவினை பொருட்கள் கண்காட்சி நடந்தது.
கண்காட்சியினை பள்ளி முதல்வர் ரோசலி துவக்கி வைத்து, பார்வையிட்டார். கண்காட்சியில் பள்ளியில் படிக்கும் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவிகளின் படைப்புகளான மலர் அலங்கார ஜாடிகளில் ஓவியம் வரைதல், கண்ணாடி ஓவியம் தீட்டுதல், பேன்ஸி நகைகள் தயாரித்தல், களிமண் வேலைபாடுகள், சுவர் அலங்கார பொருட்கள், துணிகளில் வண்ண ஓவியம் வரைதல் உள்ளிட்ட கைவினைப் படைப்புகள் இடம்பெற்றன. கண்காட்சியினை பெற்றோர்கள், ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள் பார்வையிட்டனர். ஏற்பாடுகளை ஓவிய ஆசிரியை ஜெயந்தி செய்திருந்தார்.