/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புகையில்லா போகி சிறப்பு வாகனம் நகராட்சி ஆணையர் துவக்கி வைப்பு
/
புகையில்லா போகி சிறப்பு வாகனம் நகராட்சி ஆணையர் துவக்கி வைப்பு
புகையில்லா போகி சிறப்பு வாகனம் நகராட்சி ஆணையர் துவக்கி வைப்பு
புகையில்லா போகி சிறப்பு வாகனம் நகராட்சி ஆணையர் துவக்கி வைப்பு
ADDED : ஜன 11, 2026 05:35 AM

புதுச்சேரி: புகையில்லா போகி விழா சிறப்பு வாகனத்தை ஆணையர் கந்தசாமி நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.
போகி பண்டிகையில் கால காலமாக இருந்து வரும் பழைய பொருட்களை எரிக்கும் நிகழ்வால், சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. இதனை தவிர்க்கும் விதத்தில் புதுச்சேரி நகராட்சியுடன் இணைந்து பீட் பேக் பவுண்டேஷன் சார்பில், பொதுமக்கள் எரிப்பதற்கு வைத்துள்ள பழைய பொருட்களை, அதற்கென விடப்பட்டுள்ள சிறப்பு வாகனத்தில் ஒப்படைப்பவர்களுக்கு மலர் செடிகள் மற்றும் அகல் விளக்கு வழங்கப்படுகிறது.
மூன்று நாட்கள் புதுச்சேரி நகராட்சிக்குப்பட்ட பகுதிகளில் இந்த சிறப்பு வாகனம் சென்று பழைய பொருட்களை சேகரிக்கிறது. இந்த சிறப்பு வாகனத்தை நகராட்சி ஆணையர் கந்தசாமி நேற்று கொடியசைத்து துவக்கி வைத்து, பழைய பொருள்களை வழங்கியவர்களுக்கு மலர் செடிகள் மற்றும் அகல் விளக்குகளை வழங்கினார். நிகழ்ச்சியில், நகராட்சி சுகாதார அதிகாரி ஆர்த்தி மற்றும் ஊழியர்கள் உடனிருந்தனர்.