/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கிரேன் ஆப்பரேட்டர் கீழே விழுந்து காயம்
/
கிரேன் ஆப்பரேட்டர் கீழே விழுந்து காயம்
ADDED : ஜூலை 27, 2025 11:22 PM
புதுச்சேரி: ஓடிசா மாநிலம், ஜாகட சிங்பூரை சேர்ந்தவர் தீபக் ஜனா, 23; புதுச்சேரி, மேட்டுப்பாளையம் தனியார் இரும்பு கம்பெனியில் கிரேன் ஆப்பரேட்டராக வேலை செய்து வருகிறார்.
இவர் தற்போது குடும்பத்துடன் சண்முகாபுரம், அன்னை சோனியாகாந்தி நகரில்  வசித்து வருகிறார்.
கடந்த 25ம் தேதி வழக் கம் போல் பணியில் இருந்த போது, மதியம் 12:00 ம ணியளவில் உணவு இடை வேளையாக, 70 அடி உயர  கிரேனில் இருந்து இறங்கி யபோது  நிலை தடுமாறி கீழே இருந்த இரும்பு ஸ்கிராப் மீது விழுந்து காயமடைந்தார். படுகாயமடைந்த தீபக் ஜனாவை உடன் வேலை செய்தவர்கள் அவரை மீட்டு, கதிர்காமம் அரசு பொது மருத்துவமனையிலு ம், மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர்.
புகாரின் பேரில், மேட்டுப்பாளையம் போலீசார் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் ஏற்பாடுகள் செய்யாமல் வேலை வாங்கியதாக கம்பெனி சூப்பர்வைசர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

