/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுடுகாடு சீரமைப்பு பணி: ஆணையர் ஆய்வு
/
சுடுகாடு சீரமைப்பு பணி: ஆணையர் ஆய்வு
ADDED : நவ 04, 2025 01:40 AM

திருக்கனுார்:  சோம்பட்டு சுடுகாட்டில் வளர்ந்திருந்த முட்புதர்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் சீரமைக்கும் பணியினை ஆணையர் எழில்ராஜன் நேற்று பார்வையிட்டார்.
மண்ணாடிப்பட்டு தொகுதிக்கு உட்பட்ட திருக்கனுார், மண்ணாடிப்பட்டு, சோம்பட்டு கிராமத்திற்கான சுடுகாடு முழுதும் முட்புதர்கள், செடிகள் வளர்ந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதால், அவற்றை சரி செய்ய வேண்டுமென தொகுதி எம்.எல்.ஏ., வும் அமைச்சருமான நமச்சிவாயத்திடம் பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, அமைச்சர் உத்தரவின் பேரில், மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து மூலம் சோம்பட்டு சுடுகாட்டு பகுதியில் வளர்ந்திருந்த முட்புதர் மற்றும் செடிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றி சீரமைக்கும் பணி நேற்று நடந்தது.
இப்பணியினை ஆணையர் எழில்ராஜன் பார்வையிட்டு, சுடுகாடு சீரமைக்கும் பணி விரைந்து முடிக்க ஊழியர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதில், கொம்யூன் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உடனிருந்தனர்.

