/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இ.சி.ஆர்., சாலை மேம்படுத்தும் பணி : முதல்வர் ரங்கசாமி துவக்கி வைப்பு
/
இ.சி.ஆர்., சாலை மேம்படுத்தும் பணி : முதல்வர் ரங்கசாமி துவக்கி வைப்பு
இ.சி.ஆர்., சாலை மேம்படுத்தும் பணி : முதல்வர் ரங்கசாமி துவக்கி வைப்பு
இ.சி.ஆர்., சாலை மேம்படுத்தும் பணி : முதல்வர் ரங்கசாமி துவக்கி வைப்பு
ADDED : நவ 04, 2025 01:40 AM

புதுச்சேரி: இ.சி.ஆரை., 25.3 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மேம்படுத்தும் பணியை, முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.
பொதுப்பணித்துறை, தேசிய நெடுஞ்சாலைக் கோட்டம் மூலம் இ.சி.ஆரில் உள்ள, கனகசெட்டிக்குளம் முதல் புதுச்சேரி  ராஜிவ் சதுக்கம் வரை, சாலையை, மேம்படுத்த திட்டமிடப்பட்டது.
இதற்காக, மத்திய சாலை மற்றும் தரைவழிப் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ், 25 கோடியே 3 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதன் மூலம் 13.65 கி.மீ. சாலை யை மேம்படுத்தவும், காலாப்பட்டு பகுதியில் 2.5 கி.மீ. பழுதடைந்த வாய்க்கால்களை சீரமைக்கவும், 1.5 கி.மீ. தடுப்புசுவர் அமைக்கவும், பணி மேற்கொள்ள உள்ளது. இப்பணியை, 9 மாத்திற்குள், முடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட் டுள்ளது.
இதற்கான  பணியை, முதல்வர் ரங்கசாமி, கனகசெட்டிக்குளத்தில் நேற்று துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில்,  கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ.,  அரசு செயலர் முத்தம்மா, பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் வீரசெல்வம், தேசிய நெடுஞ்சாலைக் கோட்டம் செயற் பொறியாளர் பன்னீர், உதவிப் பொறியாளர் மனோகரன், இளநிலைப் பொறியாளர் வெங்கடேஸ்வரன், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உட்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

