/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாலையோர ஆக்கிரமிப்புகள் வரும் 6ம் தேதி முதல் அகற்ற முடிவு
/
சாலையோர ஆக்கிரமிப்புகள் வரும் 6ம் தேதி முதல் அகற்ற முடிவு
சாலையோர ஆக்கிரமிப்புகள் வரும் 6ம் தேதி முதல் அகற்ற முடிவு
சாலையோர ஆக்கிரமிப்புகள் வரும் 6ம் தேதி முதல் அகற்ற முடிவு
ADDED : நவ 04, 2025 01:40 AM
புதுச்சேரி:  புதுச்சேரியில்  உள்ள ஆக்கிரமிப்புகள் வரும் 6 ம் தேதி முதல் அகற்றப்டும் என கலெக்டர் அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் சாலை ஓரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் குலோத்துங்கன் தலைமையில் நேற்று நடந்தது.  கூட்டத்தில், நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள், பொதுப் பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், புதுச்சேரி பகுதியில் பொதுமக்களுக்கு இடையூராக உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகள், அனுமதியின்றி பொது இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் பேனர்கள், கட் அவுட்டுகள் மற்றும் கொடிகளை அகற்றுவது என முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, 6ம் தேதி ஏர்போர்ட் சாலை- நாவலர் பள்ளி வரை, செஞ்சி சாலை 7ம் தேதி இ.சி.ஆர். ராஜிவ் காந்தி சதுக்கம்-மடுவுபேட் சந்திப்பு வரை, ஆம்பூர் சாலை, 10ம் தேதி மடுவுபேட்-சிவாஜி சதுக்கம், அம்பலத்தடையார் மடம் வீதி- மிஷன் வீதி, எஸ்.வி.பட்டேல் சாலை வரை, 11ம் தேதி லாஸ்பேட்டை காமராஜர் மணிமண்டபம்- உழவர் சந்தை, கல்லுாரி சாலை, சின்ன சுப்பையா பிள்ளை வீதியில் அகற்றப்படும்.
வரும் 13ம் தேதி ராஜிவ் சதுக்கம்- மேம்பாலம் வரை, பாரதி வீதி, 14ம் தேதி வழுதாவூர் சாலை, அண்ணா சாலை, 17ம் தேதி காமாட்சி அம்மன் கோவில் தெரு, 18ம் தேதி மூலக்குளம் முதல் பெரம்பை சாலை வரை, அரவிந்தோ வீதி, 20ம் தேதி விழுப்புரம் மெயின் ரோடு, நீடராஜப்பர் வீதி, 21ம் தேதி திண்டிவனம் மெயின் ரோடு, வைசியாள் வீதி, 24ம் தேதி வள்ளலார் சாலை முதல் ராஜிவ் சதுக்கம் வரை, செட்டித் தெரு, 25ம் தேதி ரங்க பிள்ளை தெரு ஆகிய இடங்களில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
ஆகவே பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், அனுமதியின்றி பொது இடங்களில் பேனர்கள், கட் அவுட்டுகள் வைத்துள்ளவர்கள் தாமாக முன்வந்து அவற்றை அகற்றுமாறு அறிவுறுத்தப் படுகிறது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

