UPDATED : அக் 08, 2026 07:46 PM
ADDED : அக் 08, 2026 04:24 PM
பொது இடத்தில் ரகளை
செய்த 4 பேர் கைது
லாஸ்பேட்டை சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு இ.சி.ஆரில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பொது இடத்தில் மது அருந்திய சாமிப்பிள்ளைதோட்டம் மண்ணாங்கட்டி மகன் முருகதாஸ்,51; முதலியார்சாவடி சந்து மகன் அருள்,46; ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மேட்டுப்பாளையம் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு மேட்டுப்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ரகளையில் ஈடுபட்ட திலாஸ்பேட்டை ரங்கநாதன் மகன், புஷ்பராஜ்,35; கைது செய்தனர்.
ரெட்டியார்பாளையம் சிறப்பு சப் இன்ஸ்பெக்ட்ர கணபதி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு மூலகுளம், விழுப்புரம் மெயின் ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு குடிபோதையில் பொது மக்களிடம் தகராறில் ஈடுபட்ட மர்வின் துபியூர் மகன், ஜெரால்டு துபியூர்,25; என்பவரை கைது செய்தனர்.
