தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கிரைம் செய்திகள்: புதுச்சேரி

கிரைம் செய்திகள்: புதுச்சேரி

கிரைம் செய்திகள்: புதுச்சேரி


UPDATED : அக் 15, 2026 06:19 PM

ADDED : அக் 15, 2026 05:58 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 15, 2026 06:19 PM ADDED : அக் 15, 2026 05:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கத்தியைகாட்டி மிரட்டியவர் கைது: லாஸ்பேட்டை போலீஸ் சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் புஷ்பலிங்கம் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு 7.00 மணியளவில், இ.சி.ஆரில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இ.சி.ஆர்., ஏர்போர்ட் சாலை சந்திப்பில், வாலிபர் ஒருவர் கத்தியைகாட்டி பொது மக்களை மிரட்டுவதாக தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு விரை சென்றனர். அப்போது போலீசாரை பார்த்ததும், அந்த வாலிபர் தப்பியோட முயன்றார். அவரை மடக்கிப்பிடித்த போலீசார் விசாரணையில், அவர் கருவடிக்குப்பம் சிவராஜ் மகன், மணிகண்டன்,26; என்பதும் அவர் அந்த வழியாக சென்ற பொது மக்களை கத்தியை காட்டி மிரட்டியதும் தெரியவந்தது. இதையடுத்து வழக்குப் பதிந்து அவரை கைது செய்த போலீசார் கத்தியை பறிமுதல் செய்தனர்.

ரகளையில் ஈடுபட்ட 2 பேர் கைது: ரெட்டியார்பாளையம் போலீஸ் சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் குருநாதன் தலைமையிலான நேற்று முன்தினம் இரவு 10.00 மணியளவில், மூலகுளம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள தனியார் பார் அருகே பொது இடத்தில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட மூலகுளம் தர்மலிங்கம் மகன் 38 என்பவரை கைது செய்தனர்.

அதேபோல் ஒதியஞ்சாலை போலீஸ் சிறப்பு உதவி சப் இன்ஸ்பெக்டர் பிரியதர்ஷினி நகரில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கண்டாக்டர் தோட்டம் பகுதியில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட பிரியதர்ஷினி நகர், கமலநாதன் மகன் லோகபிரகாஷ், 21 என்பவரை கைது செய்தனர்.

சாராயக்கடையில் ஆண் பிரேதம்: காரைக்கால் நண்டலார் சாராயக்கடையில் நேற்று அதிகாலை கடைக்கு சென்றபோது அடையாளம் தெரியாத ஆண் நபர் இறந்த நிலையில் காணப்பட்டார். தகவல் அறிந்த கோட்டுச்சேரி போலீசார் உடலை கைப்பற்றி அரசு மருந்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். போலீசார் வழக்குப் பதிந்து இறந்தவர் யார்.எந்த ஊரைச் சேர்ந்தவர் என விசாரணை செய்து வருகின்றனர்.

சாலை விபத்தில் 4 பேர்: அரியாங்குப்பம் அடுத்த மணவெளி பெரியார் நகரை சேர்ந்தவர் சண்முகம் 37; டிரைவர். கடந்த 11ம் தேதி இரவு ஸ்கூட்டரில், சண்முகம், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சின்ன வீராம்பட்டினத்திற்கு சென்றனர். எதிரே ஸ்கூட்டரை ஓட்டி வந்த நபர், சாலையோரமாக நின்றிருந்த ஆட்டோ மீது உரசிய படி வந்து, ஸ்கூட்டர் மீது மோதியது.

இதில், நிலை தடுமாறி சண்முகம், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் என நான்கு பேரும் காயமடைந்தனர். பொது மக்கள் அவர்களை மீட்டு புதுச்சேரி அரசு காயம் மருத்துவமனைக்கு அனுப்பினர். புகாரின் போலீசார் விசாரித்த வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us