தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கிரைம் செய்திகள்: புதுச்சேரி

கிரைம் செய்திகள்: புதுச்சேரி

கிரைம் செய்திகள்: புதுச்சேரி


UPDATED : அக் 05, 2026 12:00 AM

ADDED : அக் 04, 2026 05:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 05, 2026 12:00 AM ADDED : அக் 04, 2026 05:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

3 பேர் கைது: லிங்காரெட்டிப்பாளையம், தனியார் பார் அருகே குடிபோதையில் ரகளை செய்த கரசனுாரைச் சேர்ந்த பிரபாகரன், 41; என்பவரை காட்டேரிக்குப்பம் போலீசார் கைது செய்தனர்.

இதபோல், திருக்கனுார் டி.வி.மலை ரோட்டில் போதையில் பொதுமக்களுக்கு இடையூர் ஏற்படுத்திய விழுப்புரம், லட்சுமிபுரத்தை சேர்ந்த தினேஷ், 29; என்பவரை திருக்கனுார் போலீசார் கைது செய்தனர்.

அதே போல், திருபுவனை சிறப்பு பிரிவு போலீஸ் பட்டாபிராமன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். திருபுவனை சுப்ரீம் நகர் லேஅவுட் பகுதியில் பொது மக்களுக்கு இடையூராக ஆபாசமாக பேசி ரகளையில் ஈடுபட்ட விழுப்புரம் மாவட்டம், சிறுவந்தாடு வசந்த், 30, என்பவரை போலீசார் கைது செய்தனர்.

ஸ்கூட்டி திருட்டு: கலிதீர்த்தாள்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் மோகன் மனைவி லட்சுமி, 38. இவர், கடந்த 29ம் தேதி மதகடிப்பட்டில் உள்ள குண்டான்குழி மகாதேவர் கோவிலுக்கு தனது ஹோண்டா டியோ ஸ்கூட்டியில் (பி.ஒய்-05 விஎப் 5198) சென்றார். கோவில் முன், ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு கோவிலுக்கு சென்றார்.

திரும்பி வந்து பார்த்தபோது, ஸ்கூட்டியை காணவில்லை. புகாரின்பேரில் திருபுவனை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

காரைக்கால் பகுதி

கிரைம் செய்திகள்

மாணவர் மாயம்: காரைக்கால், அன்புநகரை சேர்ந்த 12 வயது சிறுவன் அங்குள்ள தந்தை பெரியார் உயர்நிலைப் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 1ம் தேதி அவர், தெருவில் நாய்களுடன் விளையாடியதாகக் கூறி அவரது தந்தை கண்டித்தார். இதையடுத்து அவரை, காணவில்லை. நேற்று முன்தினம் அவரது தாய் அளித்த புகாரின் பேரில், நகர காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தொழிலாளி தற்கொலை: காரைக்கால், நேருநகர் ஹவுசிங் போர்டு பகுதியில் வசித்து வந்தவர் மணிபாரதி, 30; கம்பி பிட்டர். திருமணமாகவில்லை. இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. நேற்று முன்தினம் மணிபாரதியை அவரது தம்பி பாலமுருகன் திருமணம் தொடர்பாக பேச வேண்டும் என, அழைத்துள்ளார்.

வேகு நேரமாகியும் வராததால், அவரது வீட்டுக்கு சென்று பார்த்தபோது, மணிபாரதி மின்விசிறியில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. நகர போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

ரகளை செய்தவர் கைது: காரைக்கால், வரிச்சிக்குடி, கொன்னகாவெலி, ஆற்றங்கரை தெரு அருகே நேற்று முன்தினம் தரங்கம்பாடி பகுதியை சேர்ந்த உத்தமஜெயராஜ், 37, என்பவர் மது போதையில், பொது இடத்தில் நின்று கொண்டு ரகளையில் ஈடுபட்டார். அவர், மீது கோட்டுச்சேரி போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us