தொடர் விடுமுறை எதிரொலி: படகு குழாமிற்கு ரூ. 21 லட்சம் வருவாய்
தொடர் விடுமுறை எதிரொலி: படகு குழாமிற்கு ரூ. 21 லட்சம் வருவாய்
UPDATED : அக் 05, 2026 12:00 AM
ADDED : அக் 04, 2026 06:15 PM

அரியாங்குப்பம்: தொடர் விடுமுறையையொட்டி, நோணாங்குப்பம் படகு குழாமில் 21 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்தது.
புதுச்சேரிக்கு வெளி மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் நோணாங்குப்பம் படகு குழாமில் படகு சவாரி செய்வது வழக்கம். வார விடுமுறையான சனி, ஞாயிறு கிழமைகள் மற்றும் பண்டிகை நாட்கள், தொடர் விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிமாக காணப்படும்.
கடந்த 2ம் தேதி காந்தி ஜெயந்தி, தொடர்ந்து சனி, ஞாயிறு என விடுமுறையால் சுற்றுலாப் பயணிகள் நோணாங்குப்பம் படகு குழாமிற்கு அதிகளவில் குவிந்தனர். மூன்று நாட்களில் படகு குழாமிற்கு 21 லட்சம் ரூபாய், வருவாய் கிடைத்தது.
இதனிடையே வெளியில் இருந்து வரும் எங்களுக்கு போதிய படகுகள் மற்றும் அடிப்படை வசதிகள் இல்லை என, சுற்றுலாப் பயணிகள் புகுார் தெரிவிக்கின்றனர்.
