sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

லிப்டில் சிக்கிய கடலுார் எம்.பி., உடன் சென்ற இருவர் மயக்கம் வடலுார் தனியார் விடுதியில் பரபரப்பு

/

லிப்டில் சிக்கிய கடலுார் எம்.பி., உடன் சென்ற இருவர் மயக்கம் வடலுார் தனியார் விடுதியில் பரபரப்பு

லிப்டில் சிக்கிய கடலுார் எம்.பி., உடன் சென்ற இருவர் மயக்கம் வடலுார் தனியார் விடுதியில் பரபரப்பு

லிப்டில் சிக்கிய கடலுார் எம்.பி., உடன் சென்ற இருவர் மயக்கம் வடலுார் தனியார் விடுதியில் பரபரப்பு


ADDED : பிப் 17, 2025 04:55 AM

Google News

ADDED : பிப் 17, 2025 04:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் மாவட்டம், வடலுார் தனியார் விடுதி மூன்றாவது மாடியில் கிராம காங்., கமிட்டி அமைப்பது தொடர்பான, கடலுார், சிதம்பரம் லோக் சபா தொகுதி மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கடலுார் எம்.பி., விஷ்ணுபிரசாத் கூட்டத்தில் பங்கேற்க சென்றார்.

மதியம் 1:00 மணியளவில், கட்சியினருடன் விடுதியின் மூன்றாவது தளத்திற்கு செல்ல, விஷ்ணுபிரசாத் எம்.பி., மற்றும் கடலுார் மாவட்ட தலைவர் திலகர், விழுப்புரம் வடக்கு மாவட்ட தலைவர் ரமேஷ், அகில இந்திய காங்., உறுப்பினர் கிருஷ்ணதாஸ், வடலுார் நகர தலைவர் பலராமன், முன்னாள் இளைஞர் காங்., தலைவர் ஷாக்கோ ஆகியோர், லிப்டில் ஏறி, கதவை மூடினர்.

லிப்ட் ஆன் செய்ததும், மேலேயும் செல்லாமல், கீழேயும் செல்லாமல் பழுதாகி நின்றுவிட்டது.

இதனால், பதற்றமடைந்த விஷ்ணுபிரசாத் எம்.பி., உள்ளிட்டோர் கட்சியினருக்கு தகவல் தெரிவித்தனர்.

கட்சியினர் மற்றும் விடுதி ஊழியர்கள் வந்து திறக்க முயன்றபோதும், லிப்ட் திறக்கவில்லை. இதையடுத்து, வடலுார் காவல்துறை மற்றும் குறிஞ்சிப்பாடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

வடலுார் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையிலான போலீசார் மற்றும் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் உத்திராபதி தலைமையிலான வீரர்கள் லிப்டை இயக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை.

அதையடுத்து, மதியம் 2:00 மணியளவில் கடப்பாரையால் லிப்ட் கதவை உடைத்து விஷ்ணுபிரசாத் எம்.பி., உள்ளிட்ட 6 பேரை மீட்டனர். அப்போது, ஷாக்கோ, பலராமன் ஆகியோர் மயக்கமடைந்தனர்.

முன்னெச்சரிக்கையாக அங்கு வந்திருந்த வடலுார் அரசு மருத்துவமனை டாக்டர்கள் லிப்டில் இருந்து வெளியே வந்தவுடன் விஷ்ணுபிரசாத் எம்.பி., மற்றும் மயக்கமடைந்த ஷாக்கோ, பலராமன் உள்ளிட்டோருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

பின், அங்கிருந்து அனைவரும் ஆலோசனை கூட்டத்திற்கு சென்றனர். 5 பேர் மட்டுமே அனுமதி என குறிப்பிடப்பட்டுள்ள லிப்டில், 6 பேர் ஏறியதாக கூறப்படுகிறது.






      Dinamalar
      Follow us