ADDED : நவ 21, 2024 05:44 AM
அ நிறம் | அளவு
பாகூர்: பாகூர் பகுதியை சேர்ந்த 17 வயதுள்ள சிறுமி, கடந்த சில நாட்களுக்கு முன், காணாமல் போய் விட்டார். இது குறித்து அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில், பாகூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
அதில், கடலுார், உண்ணாமலை செட்டி சாவடி பகுதியை சேர்ந்த டிரைவர் விஷ்ணு, 24; என்பவர்,அச்சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பழகியதும், அச்சிறுமியை, அவர் அழைத்து சென்று சென்னையில் வசித்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, சிறுமியை மீட்ட பாகூர் போலீசார், விஷ்ணுவைபோக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
