/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கலாசார நிகழ்ச்சி சபாநாயகர் வாழ்த்து
/
கலாசார நிகழ்ச்சி சபாநாயகர் வாழ்த்து
ADDED : ஏப் 05, 2025 04:23 AM
அரியாங்குப்பம்: தமிழ் புத்தாண்டை தினத்தை முன்னிட்டு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை நடத்தும், தனியார் அமைப்பிற்கு சபாநாயகர் செல்வம் வாழ்த்து தெரிவித்தார்.
அவர், வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:
ஆங்கிலப் புத்தாண்டை போல, தமிழ் புத்தாண்டையும் கொண்டாட இசைப்பூக்கள் அமைப்பு சார்பில், வரும் 13ம் தேதி, பாண்டி மெரினா கடற்கரையில், தமிழ் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. அதில், தாரை, தப்பாட்டம், சிலம்பாட்டம், மயிலாட்டம், கரகாட்டம், வால் சண்டை, சுருள் சண்டை, குத்துவரிசை, தீப்பந்தாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
தமிழர்களின் கலைகளையும், பாரம்பரியத்தையும், அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லும் நிகழ்வாக உள்ளது. புதுமையான முறையில், முயற்சி எடுத்து நடத்தும் அந்த அமைப்பிற்கு வாழ்த்துக்கள். இந்த நிகழ்ச்சியை காண வரும் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

