sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சென்டாக் வருவாய் சான்றிதழ்களுக்கு கட் ஆப் தேதி அறிவிப்பு: நீட் அல்லாத படிப்புகளுக்கு 14,038 பேர் விண்ணப்பம்

/

சென்டாக் வருவாய் சான்றிதழ்களுக்கு கட் ஆப் தேதி அறிவிப்பு: நீட் அல்லாத படிப்புகளுக்கு 14,038 பேர் விண்ணப்பம்

சென்டாக் வருவாய் சான்றிதழ்களுக்கு கட் ஆப் தேதி அறிவிப்பு: நீட் அல்லாத படிப்புகளுக்கு 14,038 பேர் விண்ணப்பம்

சென்டாக் வருவாய் சான்றிதழ்களுக்கு கட் ஆப் தேதி அறிவிப்பு: நீட் அல்லாத படிப்புகளுக்கு 14,038 பேர் விண்ணப்பம்


ADDED : மே 24, 2024 03:57 AM

Google News

ADDED : மே 24, 2024 03:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: நீட் மதிப்பெண் அல்லாத படிப்புகளுக்கு விண்ணப்பம் குவிந்து வருகின்றது. இதுவரை 14,038 பேர் பதிவு செய்துள்ள சூழ்நிலையில்,10,821 பேர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்துள்ளனர்.

சென்டாக் நீட் மதிப்பெண் சேர்க்கை அல்லாத படிப்புகளுக்கு www.centacpuducherry.in என்ற சென்டாக் இணையதளத்தில் கடந்த 8ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றது.

விண்ணப்பிக்க காலக்கெடு கடந்த 22ம் தேதி வரை காலக்கெடு அளிக்கப்பட்டு இருந்தது.

மாணவர்கள், பெற்றோர்களின் கோரிக்கை ஏற்று தற்போது இம்மாதம் 31ம் தேதி ஆன் லைனில் விண்ணப்பம் சமர்பிக்க காலக்கெடு நீட்டிக்கப்பட் டுள்ளது.

கடும் போட்டி உறுதி


நீட் அல்லாத தொழில் படிப்புகளில் 5,264 இடங்கள், கலை அறிவியல் கல்லுாரிகளில் 4,320, நுண்கலை படிப்புகளில் 75, புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம், காமராஜர் அரசு பொறியியல் கல்லுாரி, மகளிர் அரசு பொறியியல் கல்லுாரிகளில் உள்ள பி.டெக்., லேட்ரல் என்ட்ரி படிப்பில் 334 இடங்கள் என மொத்தம் 9,993 இடங்கள் உள்ளன.

ஆனால் நீட் மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை இல்லாத படிப்புகளுக்கு இந்தாண்டு எதிர்பார்த்தைவிட விண்ணப்பங்கள் குவிந்து வருகின்றது.

இதுவரை 14,038 பேர் விண்ணப்பிக்க ஆன்லைனில் பதிவு செய்துள்ள சூழ்நிலையில், அவர்களில் 10,821 பேர் விண்ணப்பத்தினை முழுதுவ மாக பூர்த்தி செய்து சமர்பித்துள்ளனர்.

குழப்பம்


விண்ணப்பத்துடன் குடியுரிமை, குடியிருப்பு, ஜாதி உள்ளிட்ட புதுப்பிக்கப்பட்ட சான்றிதழ்களை மாணவர்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என சென்டாக் அறிவுறுத்தி இருந்தது.

எப்போதுமே சென்டாக்கில் ஓராண்டு காலத் திற்கான வருவாய் துறையின் சான்றிதழ்கள் ஏற்றுக் கொள்ளப்படும்.

ஆனால் வருவாய் துறையின் சான்றிதழ்களுக்கான கட் ஆப் தேதி அறிவிக்கபடாததால் குழப்பம் ஏற்பட்டது.

இது தொடர்பாக சென்டாக் நிர்வாகம், வருவாய் துறையின் கவனத்திற்கு கொண்டு சென்றது.

அதையடுத்து வருவாய் துறை தற்போது வருவாய் துறையின் சான்றிதழ்களுக்கான கட் ஆப் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கட் ஆப் தேதி


குடியுரிமை, குடியிருப்பு, ஜாதி உள்ளிட்ட வருவாய் துறை சான்றிதழ் களுக்கு 01.06.2023ம் தேதி முதல் ஓராண்டிற்கும், இ.டபுள்.எஸ்., விவசாயி இட ஒதுக்கீட்டிற்கு 01.04.2024ம் தேதி முதல் சான்றிதழ்கள் பெற்று சமர்பிக்க வேண்டும்.

இந்த தேதியில் இருந்து சமர்பிக்கப்பட்ட வருவாய் துறை சான்றிதழ்கள் மட்டுமே செல்லும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம்


எஸ்.சி., எஸ்.டி., மாற்று திறனாளி பிரிவு மாணவர்கள் நீட் மதிப்பெண் அல்லாத டிகிரி, டிப்ளமோ படிப்புக்களில் சேர 500 ரூபாய்,கலை அறிவியல் வணிக படிப்பில் சேர 150 ரூபாய் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

இதர பிரிவு மாணவர்கள் நீட் அல்லாத டிகிரி, டிப்ளமோ தொழில் படிப்பில் சேர 1000 ரூபாய், கலை அறிவியல் படிப்பில் சேர 300 ரூபாய் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

பிற மாநில மாணவர்கள் நீட் அல்லாத டிகிரி, டிப்ளமோ படிப்பில் விண்ணப்பிக்க 1500 ரூபாய், கலை அறிவியல், வணிக படிப்பில் விண்ணப்பிக்க 500 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.






      Dinamalar
      Follow us