நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: வில்லியனுார் அடுத்த ராமநாதபுரம், புது தெருவை சேர்ந்தவர் விஜயசங்கர், 29; டிரைவர். கடந்த 25ம் தேதி அங்குள்ள பாலம் வழியாக பைக்கில் சென்றார்.
அதே பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவர் மாடுகளை சாலையில் ஓட்டிச் சென்றார். அப்போது மாடு இடித்து விஜயசங்கர் கீழே விழுந்தார். தட்டிக்கேட்ட உதயசங்கரை செந்தில், கத்தியால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.
வில்லியனுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

