/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த மரம் வெட்டி அகற்றம்
/
போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த மரம் வெட்டி அகற்றம்
போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த மரம் வெட்டி அகற்றம்
போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த மரம் வெட்டி அகற்றம்
ADDED : ஜூன் 20, 2025 02:45 AM

புதுச்சேரி : காமராஜர் நகர் தொகுதி, சுந்தரமூர்த்தி நகரில் பொதுமக்களுக்கு இடையூராக இருந்த மரத்தை காங்., தொகுதி பொறுப்பாளர் தேவதாஸ், வனத்துறை மூலம் வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டார்.
காமராஜர் நகர் தொகுதிக்கு உட்பட்ட கவிகுயில், சுந்தரமூர்த்தி நகரில் சாலையின் நடுவே போக்குவரத்திற்கு இடையூறாக பெரிய மரம் ஒன்று இருந்தது. அந்த மரத்தால், அப்பகுதி கழிவுநீர் வாய்க்கால் சேதமடைந்து, கழிவுநீர் சாலையில் தேங்கியதால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகினர்.
தொகுதி காங்., பொறுப்பாளர் தேவதாஸிடம், அப்பகுதி மக்கள் மரத்தை வெட்டி அகற்ற கோரிக்கை வைத்தனர்.இதையடுத்து, பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த மரத்தை வனத்துறை மூலம் வெட்டி அகற்றும் பணியில் காங்., தொகுதி பொறுப்பாளர் தேவதாஸ் ஈடுபட்டார்.தொடர்ந்து, மரத்தால் சேதமடைந்த கழிவுநீர் வாய்க்காலை சரிசெய்யவும் நடவடிக்கை மேற்கொண்டார்.