/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் சைபர் பீட் அதிகாரிகள் வாட்ஸ் ஆப் குழு உருவாக்க முடிவு
/
புதுச்சேரியில் சைபர் பீட் அதிகாரிகள் வாட்ஸ் ஆப் குழு உருவாக்க முடிவு
புதுச்சேரியில் சைபர் பீட் அதிகாரிகள் வாட்ஸ் ஆப் குழு உருவாக்க முடிவு
புதுச்சேரியில் சைபர் பீட் அதிகாரிகள் வாட்ஸ் ஆப் குழு உருவாக்க முடிவு
ADDED : ஜூன் 14, 2025 11:17 PM
இந்தியாவிலேயே முதல் முறையாக புதுச்சேரியில் சைபர் பீட் அதிகாரிகள் வாட்ஸ் ஆப் குழு உருவாக்க சைபர் கிரைம் போலீசார் முடிவு செய்துள்ளனர்.
புதுச்சேரியில் நாளுக்கு நாள் இணையவழி மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதுகுறித்து புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தி வரும் நிலையில், குற்றச்சம்பவங்கள் குறைந்ததாக தெரியவில்லை.
இந்நிலையில், இந்தியாவிலேயே முதல் முறையாக புதுச்சேரி போலீஸ் உயர் அதிகாரிகள் அனுமதியுடன், 'சைபர் பீட் அதிகாரிகள்' என்ற பெயரில் வாட்ஸ் ஆப் குழு தொகுதி வாரியாக துவங்க புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் குழுவில், சிறப்புப் பிரிவு போலீசார், உள்ளூர் போலீஸ் அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் இணைக்கப்பட உள்ளனர்.
இந்த வாட்ஸ் - ஆப் குழு மூலம் சைபர் கிரைம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் குற்றத்தடுப்பு குறித்தும், 1930 அழைப்பு, சைபர் குற்றங்கள் தொடர்பான புகார்கள், கேள்விகள் போன்றவைகளை பொதுமக்கள் உடனடியாக தெரிவித்து கொள்வதும், அவர்களின் கருத்துகளை பகிர்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த வாட்ஸ்- ஆப் குழுவில் கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், தனியார் மற்றும் பல்வேறு அரசு நிறுவன ஊழியர்களும் சேர்க்கப்பட உள்ளதால், அவர்கள் உதவியுடன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, அவர்கள் தெரிவிக்கும் புகார் மீது உடனடி தீர்வு காணப்படும் என, போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த வாட்ஸ் ஆப் குழு உருவாக்கம் போலீஸ் உயர் அதிகாரிகள் அனுமதி விரைவில் துவங்கப்பட உள்ளது.