sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

புதுச்சேரியை கிறுகிறுக்க வைக்கும் 'பெஸ்டி' கலாசாரம் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

/

புதுச்சேரியை கிறுகிறுக்க வைக்கும் 'பெஸ்டி' கலாசாரம் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

புதுச்சேரியை கிறுகிறுக்க வைக்கும் 'பெஸ்டி' கலாசாரம் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

புதுச்சேரியை கிறுகிறுக்க வைக்கும் 'பெஸ்டி' கலாசாரம் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை


ADDED : ஜன 21, 2024 04:18 AM

Google News

ADDED : ஜன 21, 2024 04:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தற்போதைய புதுச்சேரியின் இளைய சமுதாயம், கல்லுாரிகளில் உச்சரிக்கும் ஒற்றை சொல் தான் 'பெஸ்டி'. பெஸ்ட் பிரெண்ட் என்பதன் சுருக்கம் தான் பெஸ்டி. அவன் என்னுடைய டியர் பெஸ்டி என்று தன்னுடைய காதலர்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கின்றனர் யுவதிகள்.

புதுச்சேரி கல்லுாரிகளில் பரவி வரும் இந்த பெஸ்டி நட்பு கலாசாரம், இளைஞர்களை சைபர் கிரைம் வரை கொண்டு சென்று நிறுத்தி வருகிறது. பெஸ்டியிடம் நட்பாக இருந்தபோது எடுத்துக்கொண்ட கல்லுாரி மாணவிகளின் புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் ஆபாசமாக சித்தரித்து பரப்பப்படுகின்றன. காதலனுக்கும், தோழனுக்கும் இடையில் சிக்கி மாணவிகள் தான் இறுதியாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் கீர்த்தி கூறியதாவது:

இன்றையகாலக்கட்டத்தில் ஆண் - பெண் பழகி நெருங்கி நட்பு கொள்ளுவதற்கான சூழல் அதிகமாக உள்ளது. இதனால் காதலன்- காதலிகள் இருந்தாலும் நம்பிக்கையான பெஸ்டியை தோழனாகவும், தோழியாகவும் வைத்து கொள்ளுவது அதிகரித்துள்ளது.

பெஸ்டியில் பாய் பெஸ்டி, கேர்ள் பெஸ்டி இருக்காங்க. இரண்டு பசங்க, இரண்டு பொண்ணுங்க எப்படி பெஸ்டியா இருக்காங்களோ அதே மாதிரி, ஒரு பையனுக்கு பெண்ணும், ஒரு பெண்ணுக்குப் பையனும் பெஸ்டியா உள்ளனர்.

இரண்டு பாய் பெஸ்டிகளை எடுத்துக்கிட்டோம்னா அவங்க இரண்டு பேருக்குள்ள ஏதும் பிரச்னை வந்தா, அவங்க ரொம்ப ஈசியா பிரிஞ்சு போயிடுவாங்க. ஒரே ஜெண்டர்ஸ்ல பெஸ்டியா இருக்கரவங்க பிரிஞ்சு போனா, அவங்க திரும்ப சேருவது கஷ்டம்.

ஆனால், இந்த ஆண், பெண் உறவில் பெஸ்டிகளா இருக்கரவங்க பிரியும்போது தான் சிக்கலே வருகிறது.

ஏதேனும் பிரச்னை வந்து ஆண் தோழனான பெஸ்டியை பிரிந்து சென்று மாணவி காதலன் உடன் சேர்ந்தால் அவ்வளவு தான். பிரிவினை தாங்கி கொள்ள முடியாத ஆண் பெஸ்டிகள், ஏற்கனவே நம்பிக்கையுடன் எடுத்துக் கொண்ட தோழியின் புகைப்படங்களை ஆபாசமாக பதவிடுகின்றனர்.

இதனால் அதிகம் பாதிக்கப்படுவது மாணவிகள் தான். அண்மை காலமாக இதுபோன்ற புகார்கள் அதிகம் வர துவங்கியுள்ளன. இந்த பெஸ்டி கலாசாரம் நம் மண்ணிற்கு ஏற்றது அல்ல. இந்த பெஸ்டி கலாசாரத்தில் இருந்து கல்லுாரி மாணவிகள் விலகி இருப்பது நல்லது.

பெஸ்டி உறவில் நிறைய நல்ல விஷயங்கள் இருப்பதாக சொன்னாலும், அதனை சிலர் தவறான எண்ணத்தோட அணுகி, தவறான பாதைக்கு கொண்டு செல்லும் வாய்ப்பே பெரும்பாலும் இருக்கிறது. காதலன் - தோழன் எல்லையை வரையை செய்வது கடினம். முடிந்த அளவுக்கு நம்மோட வாழ்க்கையில் மனதளவிலும், உடலளவிலும் எந்த பாதிப்புகளையும் ஏற்படுத்தாத அளவுக்கு பெஸ்டியை கையாண்டால் அனைவருக்குமே நல்லது' என்றார்.






      Dinamalar
      Follow us