தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/6 பேரிடம் சைபர் கும்பல் ரூ.1 லட்சம் மோசடி

6 பேரிடம் சைபர் கும்பல் ரூ.1 லட்சம் மோசடி

6 பேரிடம் சைபர் கும்பல் ரூ.1 லட்சம் மோசடி


UPDATED : நவ 23, 2026 08:28 PM

ADDED : நவ 23, 2026 08:28 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 23, 2026 08:28 PM ADDED : நவ 23, 2026 08:28 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி சாரம் பகுதியை சேர்ந்த ஆண் நபர் ஒருவரின் தனியார் வங்கி கணக்கில் இருந்து மர்ம நபர்கள் ரூ.67 ஆயிரத்து 737 பணத்தை எடுத்துள்னர்.

நைனார்மண்டபம் பகுதியை சேர்ந்த ஆண் நபர் ஒருவர் தவறுதலாக வேறு ஒரு வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பி உள்ளார். அதனை மீட்டு தருமாறு அவர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அவர்கள் அந்த வழக்கை முதலியார்பேட்டை போலீசிற்கு அனுப்பி வைத்தனர்.

அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த ஆண் நபர் ஒருவரின் வங்கி கணக்கில் இருந்து மர்ம நபர்கள் ரூ.4 ஆயிரம் எடுக்க முயன்றுள்ளனர். ஆனால், பரிவர்த்தனை அளவு முடிந்துவிட்டதால், அவர்களால் பணத்தை எடுக்க முடியவில்லை. இதனால் அவரின் சேமிப்பு கணக்கில் இருந்து ரூ.501 எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரியாங்குப்பம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

லாஸ்பேட்டையை சேர்ந்த ஆண் நபர் ஒருவரிடம் மர்ம நபர் குறிப்பிட்ட சில சேவைகள் செய்வதாக கூறி ரூ.205 பெற்றுள்ளார். ஆனால் அவர் பணத்தை பெற்று ஏமாற்றியுள்ளார்.

வில்லியனுாரை சேர்ந்த ஆண் நபரை தொடர்பு கொண்ட மர்ம நபர் தன்னை கவுதம் ரத்தோட் என அறிமுகம் செய்துள்ளார். பின், ஆன்லைனில் முதலீடு செய்தால், அதிக லாபம் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். அதனை நம்பிய அந்த ஆண் நபர் ரூ.12 ஆயிரத்து 052 அனுப்பி ஏமாந்தார்.

புதுச்சேரி நகரப் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வந்த வீட்டில் இருந்து வேலை என்ற விளம்பரத்தை நம்பி அப்பெண் பல்வேறு கட்டணங்கள் என ரூ.13 ஆயிரத்து 499 அனுப்பி ஏமாந்தார்.

ரெட்டியார்பாளையம் பகுதியை சேர்ந்த ஆண் ஒருவருக்கு அடையாளம் தெரியாத பெண் ஒருவருடன் சமூகஊடகம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பேசி வந்த அந்த பெண் அவரின் முகம் மறந்து விட்டதால், புகைப்படம் அனுப்புமாறு கூறியுள்ளார். அதனை நம்பிய அந்த ஆண் நபரும் புகைப்படத்தை அனுப்பி உள்ளார். ஆனால் அந்த பெண் அவரின் போட்டோவை மார்பிங் செய்து வெளியிடுவேன் என மிரட்டி உள்ளார்.

இந்த சம்பவங்கள் குறித்த புகார்களை சைபர் கிரைம் போலீசார் விசாரணை செய்து, பின் சம்பந்தப்பட்ட போலீசாரின் விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us