/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெண்களின் பெயரை கூறி மோசடி சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை
/
பெண்களின் பெயரை கூறி மோசடி சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை
பெண்களின் பெயரை கூறி மோசடி சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை
பெண்களின் பெயரை கூறி மோசடி சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை
ADDED : மார் 17, 2024 05:15 AM
புதுச்சேரி: வீட்டு பெண்களை காவலில் வைத்துள்ளதாக மிரட்டி பணம் கேட்டால் ஏமாற வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ள அறிவிப்பில்:
புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக சைபர் கிரைம் மோசடி கும்பல், ஆன்லைன் மூலம் தொடர்பு கொண்டு, உங்கள் வீட்டு பெண்களின் உண்மை பெயரை கூறி, அவர்களை வழக்கு சம்மந்தமாக விசாரணை செய்வதற்கு தங்கள் கஸ்டடியில் வைத்துள்ளோம் என மிரட்டி பணம் பறிக்கும் நோக்கத்துடன் புதிய வகையுத்தியை கையாண்டுவருகின்றனர்.
எனவே, பொதுமக்கள் யாரும் இதுபோன்று அழைப்புகள் ஏதேனும் வந்தால், அதனை யாரும் உண்மை என்று நம்ப வேண்டாம். மேலும், மேற்படி அழைப்புகளை நம்பி உங்களுடைய பணத்தை கொடுத்து ஏமாறவேண்டாம்.
கடந்த வாரத்தில் மட்டும் இது போன்ற 7 புகார்கள் சைபர் கிரைம் போலீசுக்கு வந்துள்ளது.
எனவே, இதுபோன்று அழைப்பு ஏதேனும் வந்தால் உடனடியாக அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் கொடுக்கலாம் அல்லது 1930 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு மேற்படி புகாரை பதிவு செய்யும்படி சைபர் கிரைம் போலீசார் கேட்டுகொண்டுள்ளனர்.

