/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வாடகை லாரி புக் செய்து ரூ.80 ஆயிரம் ஏமாந்த நபர் சைபர் கிரைம் போலீசார் விசாரணை

ADDED : ஜன 09, 2025 06:20 AM
புதுச்சேரி: புதுச்சேரியை சேர்ந்த 7 பேர் ஆன்லைன் மோசடி கும்பலிடம் 2 லட்சத்தை இழந்துள்ளனர்.
லாஸ்பேட்டையை சேர்ந்த சத்தியராஜ் என்பவர், வாட்ஸ் அப் மூலம் வாடகைக்கு லாரி ஒன்றை புக் செய்தார்.இதையடுத்து, சத்தியராஜை தொடர்பு கொண்ட மர்மநபர், லாரிக்குவாடகையாக முன்பணம் செலுத்த வேண்டுமென கூறியுள்ளார்.இதைநம்பி, சத்தியராஜ் முன்பணமாக 80 ஆயிரம் அனுப்பி ஏமாந்தார்.
லாஸ்பேட்டை சேர்ந்த பிரவீன், இன்ஸ்டாகிராமில்வந்த வேலை வாய்ப்பு விளம்பரத்தை பார்த்து, விண்ணப்பிக்க முயன்றார்.அப்போது, செயலாக்க கட்டணம் செலுத்த வேண்டுமென தெரிவிக்கப்பட்டதால், 40 ஆயிரம் செலுத்தி ஏமாந்தார்.
கலைவாணர் நகரை சேர்ந்த பாஸ்கரன் என்பவரின் மொபைல் எண்ணிற்கு வந்த குறுச்செய்தி லிங்க்கை கிளிக் செய்ததால், மர்மநபர்கள் அவரது வங்கி கணக்கில் இருந்து 50 ஆயிரத்தைஎடுத்து ஏமாற்றியுள்ளனர்.
உறுவையாறை சேர்ந்த ராஜேஷ் 3 ஆயிரத்து 500, முத்தியால்பேட்டை சேர்ந்த நவீன் 10 ஆயிரத்து 800, காரைக்கால், டி.ஆர்.பட்டிணத்தை சேர்ந்த ரமேஷ் 8 ஆயிரத்து 500, மூலகுளத்தை சேர்ந்த கிருபாகரன் 7 ஆயிரத்து 400என, 7 பேர், மோசடி கும்பலிடம் 2 லட்சத்து 200 ரூபாயை இழந்துள்ளனர்.
இதுகுறித்த புகார்களின் பேரின் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.