/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி தொழிலதிபரிடம் ரூ.1.27 கோடி மோசடி மர்ம கும்பலுக்கு சைபர் கிரைம் போலீஸ் வலை
/
புதுச்சேரி தொழிலதிபரிடம் ரூ.1.27 கோடி மோசடி மர்ம கும்பலுக்கு சைபர் கிரைம் போலீஸ் வலை
புதுச்சேரி தொழிலதிபரிடம் ரூ.1.27 கோடி மோசடி மர்ம கும்பலுக்கு சைபர் கிரைம் போலீஸ் வலை
புதுச்சேரி தொழிலதிபரிடம் ரூ.1.27 கோடி மோசடி மர்ம கும்பலுக்கு சைபர் கிரைம் போலீஸ் வலை
ADDED : மே 10, 2025 01:17 AM
புதுச்சேரி: பங்கு சந்தையில் முதலீடு செய்தால், அதிக லாபம் ஈட்டலாம் எனக் கூறி புதுச்சேரி தொழிலதிபரிடம் ரூ.1.27 கோடி அபேஸ் செய்த மர்ம கும்பலை, சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி, லாஸ்பேட்டையை சேர்ந்த தொழிலதிபர், சேதராப்பட்டில் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு கம்பெனி நடத்தி வருகிறார். இவருக்கு கடந்த மாதம் 13ம் தேதி வாட்ஸ் ஆப் எண்ணிற்கு, உங்களுக்கு பங்குச் சந்தையை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா? பங்குச்சந்தையில் எவ்வாறு முதலீடு செய்வது. இப்போதைய சூழ்நிலையில் லாபகரமான பங்குகள் எது, எந்தெந்த நேரத்தில் பங்குகளை விற்றால் லாபம் அதிகம் கிடைக்கும் போன்ற பல்வேறு கேள்விகளுடன் குறுஞ்செய்தி லிங்க் வந்தது.
மேலும், நீங்கள் இந்த வாட்ஸ் ஆப் லிங்கில் இணைந்தால், பங்குச்சந்தை தொடர்பான அனைத்து விவரங்களும் கற்றுக் கொடுக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, தொழிலதிபர் அந்த வாட்ஸ் ஆப் லிங்கில் இணைந்தார். அவருக்கு, அந்த லிங்க் மூலம் பங்குச்சந்தை முதலீடு தொடர்பாக சில நாட்கள் வகுப்புகள் எடுக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து தொழிலதிபர், மர்ம நபர் கொடுத்த லிங்கிலேயே பணத்தை முதலீடு செய்துள்ளார்.
அவர் ரூ.20 லட்சம் முதலீடு செய்தபோது, அவருடைய தனிப்பட்ட கணக்கில் ரூ.1.05 கோடி இருப்பது போன்று காட்டியது. அதனை நம்பிய தொழிலதிபர் கடந்த 10 நாட்களில் ரூ.1.27 கோடி முதலீடு செய்தார். அவருடைய கணக்கில் ரூ.6.64 கோடி இருப்பது போல் காட்டியது. அந்த பணத்தை எடுக்க முயற்சி செய்தபோது, எடுக்க முடியவில்லை.
மேலும், அதிகப்படியான லாபம் கிடைத்துள்ளதால் ஜி.எஸ்.டி., வருமான வரி கட்ட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகே, போலி பங்குச்சந்தையில் முதலீடு செய்து பணத்தை இழந்திருப்பதை அறிந்த தொழிலதிபர், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து, மர்ம கும்பல் குறித்து விசாரித்து வருகின்றனர்.