‘கூகுள் பே’வில் வரும் லிங்கை கிளிக் செய்ய வேண்டாம் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
‘கூகுள் பே’வில் வரும் லிங்கை கிளிக் செய்ய வேண்டாம் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
ADDED : ஆக 20, 2026 08:40 PM

புதுச்சேரி: ‘கூகுள் பே ஆண்டு விழா’ பெயரில் சமூக வலைதளங்களில் பரவும் லிங்கை கிளிக் செய்ய வேண்டாம் என, சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:
தற்போது வாட்ஸ் ஆப் குரூப்கள் மற்றும் தெரியாத நபர்களிடமிருந்து ‘கூகுள் பே 9ம் ஆண்டு விழா சலுகை’ என, போலியான லிங்க் வேகமாக பரவி வருகிறது.
அந்த லிங்கை கிளிக் செய்து உள்ளே சென்று அதில் கேட்கப்படும் தகவல்களை பதிவிட்டால், உங்களது வங்கி கணக்கில் உள்ள பணத்தை மர்மநபர்கள் மோசடியாக எடுத்து ஏமாற்றி விடுவர். ஆகையால், வாட்ஸ் ஆப்களில் வரும் இத்தகைய லிங்குகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம்.
இதேபோல், யோனோ எஸ்.பி.ஐ., என்ற பெயரில் வரும் லிங்கையும் யாரும் பதிவிறக்கம் செய்து பணத்தை இழக்க வேண்டாம். இதனை மற்றவர்களுக்கும் பகிர வேண்டாம் என, எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
