/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'பிரபல துணிக்கடை பெயரில் வரும் மொபைல் செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம்': சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

ADDED : நவ 18, 2025 05:56 AM

புதுச்சேரி: பிரபல துணிக்கடை பெயரில் வாட்ஸ் ஆப் குரூப்களில் வரும் மொபைல் செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது: தற்போது வாட்ஸ் ஆப் குரூப்கள் மற்றும் தெரியாத நபர்களிடமிருந்து பிரபல துணிக்கடையின் பெயரில் சலுகை விற்பனை திட்டத்தில் சேர்ந்து பயனடையுங்கள்' என்ற போலியான லிங்க் வேகமாக பரவி வருகிறது.
அந்த லிங்கை கிளிக் செய்து உள்ளே சென்று அதில் கேட்கப்படும் தகவல்களை பதிவிட்டால், உங்களது வங்கி கணக்கில் உள்ள பணத்தை மர்மநபர்கள் மோசடியாக எடுத்து ஏமாற்றி விடுகின்றனர். ஆகையால், வாட்ஸ் ஆப்களில் வரும் இத்தகைய லிங்குகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம்.
இதேபோல், யோனோ எஸ்.பி.ஐ., (YONO SBI), Reward Point APK Application, PM KISAN YOJANA Application, RTO E Challan என்ற பெயரில் வரும் லிங்க்கையும் யாரும் பதிவிறக்கம் செய்து பணத்தை இழக்க வேண்டாம். இதனை மற்றவர்களுக்கும் பகிர வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், சைபர் குற்றங்கள் தொடர்பான புகார் மற்றும் சந்தேகங்களுக்கு 1930, 0413 2276144, 9489205246 எண்களை தொடர்பு கொள்ளவும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.