/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வங்கி கணக்கு ,சிம்கார்டு யாரிடமும் கொடுக்கவேண்டாம் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

ADDED : ஏப் 18, 2025 04:11 AM
புதுச்சேரி: வங்கி கணக்கு, சிம்கார்டை யாரிடமும் கொடுக்க வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு எச்சரித்துள்ளனர்.
புதுச்சேரியில் பல்வேறு வகையில், மோசடி கும்பல் பொதுமக்களை ஏமாற்றி வருகின்றனர். சைபர் கிரைம் போலீசார், லட்ச கணக்கில் ஏமாறும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், வங்கி கணக்கு, சிம்கார்டை யாரிடமும் கொடுக்க வேண்டாம். மேலும், தங்களுடைய ஆவணங்கள் மூலம் சிம்கார்டு வாங்கி தர வேண்டாம்.
வங்கி கணக்கில் பணம் அனுப்புகிறோம். அந்த பணத்திற்கு கமிஷன் தருகிறேன் என யாராவது கூறினால், நம்பி ஏமாற வேண்டாம்.
வங்கி, கணக்கு மற்றும் மொபைல் சிம் கார்டை வைத்து, இணையவழி மூலம் மோசடி கும்பல், வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்து கொள்வார்கள். மோசடி செய்யும் வகையில், வங்கி கணக்கில் பணம் வந்தால் அந்த நபர் மீது சைபர் கிரைம் போலீசாரால் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு இன்ஸ்பெக்டர் தியாகராஜன் கூறினார்.