/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மோசடிக்காரர்களிடம் உஷார் சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை
/
மோசடிக்காரர்களிடம் உஷார் சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை
மோசடிக்காரர்களிடம் உஷார் சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை
மோசடிக்காரர்களிடம் உஷார் சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை
ADDED : நவ 23, 2024 06:23 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் இணைய வழி மோசடிக்காரர்களிடம் விழிப்புணர்வாக இருக்க வேண்டும், என சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி இளைஞர் ஒருவரை மர்ம நபர்கள் சிலர் தொடர்பு கொண்டு அவருக்கு ரூ.3 லட்சம் பரிசுத்தொகை விழுந்துள்ளதாக தெரிவித்தனர். அதை நம்பிய இளைஞரிடம் அந்த பணத்திற்கு ஜி.எஸ்.டி செலுத்த, ரூ.35 ஆயிரம் அனுப்பி சொல்லி உள்ளனர். குறிப்பிட்ட பணத்தை அனுப்பிய பிறகே அவருக்கு ஏமாற்றப்பட்டது தெரிந்தது.
அதேபோல, புதுச்சேரியை சேர்ந்த ஒருவர், பொதுமக்களுக்கு உதவி செய்ததை வீடியோவாக பதிவு செய்து, இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். அந்த வீடியோவை மர்ம நபர் ஒருவர் எடுத்து, மக்களுக்கு அவர் உதவி செய்வதாக பல்வேறு நபர்களிடம் இருந்து பணம் பறித்துள்ளார். புதுச்சேரியை சேர்ந்த இளைஞர் ஒருவர், கடன் வழங்கும் 'ஆப்'பில், ரூ.28 ஆயிரம் பணம் கடனாக வாங்கினார். அடுத்த சில தினங்களில், அதே 'ஆப்'பில், ரூ.35 ஆயிரம் செலுத்தினார்.
ஆனால், அதற்கு பிறகு அவரை தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், நாங்கள் கேட்கும் பணத்தை கொடுக்காவிட்டால், உங்கள் புகைப்படத்தை நிர்வாணமாக சித்தரித்து, உறவினர்களுக்கு அனுப்பி வைத்து விடுவதாக, சொல்லி மிரட்டி வருகின்றனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள், புகார் அளித்தனர். சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.