/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பகுதிநேர வேலையை நம்பி 300க்கும் மேற்பட்டோர் ரூ.20 கோடி இழப்பு சைபர் குற்றத்தடுப்பு போலீசார் எச்சரிக்கை
/
பகுதிநேர வேலையை நம்பி 300க்கும் மேற்பட்டோர் ரூ.20 கோடி இழப்பு சைபர் குற்றத்தடுப்பு போலீசார் எச்சரிக்கை
பகுதிநேர வேலையை நம்பி 300க்கும் மேற்பட்டோர் ரூ.20 கோடி இழப்பு சைபர் குற்றத்தடுப்பு போலீசார் எச்சரிக்கை
பகுதிநேர வேலையை நம்பி 300க்கும் மேற்பட்டோர் ரூ.20 கோடி இழப்பு சைபர் குற்றத்தடுப்பு போலீசார் எச்சரிக்கை
ADDED : செப் 29, 2025 12:45 AM
புதுச்சேரி: புதுச்சேரியை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் பகுதிநேர வேலையாக ஆன்லைனில் முதலீடு செய்து, சைபர் கும்பலிடம் ரூ.20 கோடிக்கு மேல் இழந்துள்ளனர்.
இதுகுறித்து புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் விடுத்துள்ள எச்சரிக்கை செய்தியில் கூறியிருப்பதாவது:
இந்தியாவில் சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, வீட்டில் இருந்தே சம்பாதிக்க ஆர்வம் காட்டும் பெண்கள், பட்டதாரிகள் ஆகியோரை, வாட்ஸ் ஆப், பேஸ் புக் மற்றும் டெலிகிராம் மூலம் அண்டை நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, சீனா, கம்போடியா, நைஜீரியா போன்ற நாடுகளை சேர்ந்த மர்ம நபர்கள், எம்.என்.சி., நிறுவனங்களின் பெயர்களில் வேலை வாய்ப்பு தொடர்பாக விளம்பரங்களை வெளியிடுகின்றனர்.
அதன் மூலம் தொடர்பு கொள்பவர்களை, வீடியோக்களுக்கு லைக் கொடுப்பது, கருத்து சொல்வது, ஆன்லைனில் மற்றவர்களுக்கு பகிர்வது போன்ற சிறிய செயல்களை செய்ய வைத்து, ஒரு நாளைக்கு 500 இருந்து 1000 ரூபாய் வரை அவர்களுடைய வங்கி கணக்கிற்கு அனுப்புகின்றனர்.
அடுத்த கட்டமாக பணம் முதலீடு செய்தால், அதன்மூலம் அதிக லாபம் கிடைக்கும் என கூறுகின்றனர்.
அதற்காக, போலியான வலைத்தளங்களை உருவாக்கி, அதில் பொதுமக்களை கணக்கு துவங்க வைத்து, முதலீடு செய்ய வைக்கின்றனர்.
பின், அவர்களுக்கு பெரிய தொகை லாபம் கிடைத்துள்ளது போல் பிம்பத்தை ஏற்படுத்தி, மேலும் அதிக தொகையை முதலீடு செய்ய வைக்கின்றனர்.
அதன் மூலம் கிடைக்கும் லாப தொகையை வெளியே எடுக்க முற்படும் போது மோசடி கும்பல் அவர்களின் கணக்கை முடக்கி, சேவை வரி, செயலாக்க கட்டணம் என்ற பெயரில் பணம் கட்ட சொல்கின்றனர். அதன் பிறகே, தாங்கள் ஏமாற்றப்பட்டதை பொதுமக்கள் உணருகின்றனர்.
இதுபோன்று, ரூ.20 கோடிக்கு மேல் பணத்தை இழந்துள்ளதாக புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷனில், 300க்கும் மேற்பட்டோர் புகார் அளித்துள்ளனர்.
அதில், படித்த பெண்கள் மற்றும் இளைஞர்களே அதிக அளவில் ஏமாந்துள்ளனர்.
ஆகையால், போலியான விளம்பரத்தை நம்பி ஏமாற வேண்டாம். சைபர் குற்றம் தொடர்பாக, புகார் கொடுக்க 1930 மற்றும் 0413-2276144, 9489205246 மற்றும் மின்னஞ்சல்: cybercell-police@py.gov.in தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.