புதுச்சேரியிலும் புயல் அடிக்கும் ஜெகத்ரட்சகன் எம்.பி., பேட்டி
புதுச்சேரியிலும் புயல் அடிக்கும் ஜெகத்ரட்சகன் எம்.பி., பேட்டி
ADDED : செப் 23, 2026 08:43 PM
புதுச்சேரி, செப். 24–காங்., கட்சிக்கு தலைமை இல்லாததால், விஜயை புதுச்சேரி தலைவராக போட்டுள்ளனர் என, ஜெகத்ரட்சகன் எம்.பி., தெரிவித்தார்.
புதுச்சேரி, தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் போட்டியிடும், தி.மு.க., வேட்பாளர் சேது செல்வத்தை ஆதரித்து பிரசாரம் செய்த ஜெகத்ரட்சகன் எம்.பி., நிருபர்களிடம் கூறியதாவது:
தட்டாஞ்சாவடி இடைதேர்தலில் கள நிலவரம் தி.மு.க., விற்கு பிரகாசமாக உள்ளது. அதிக ஓட்டுகள் வித்யாசத்தில் தி.மு.க., வெற்றி பெறும். தமிழகத்தில் தாராபுரம், மதுராந்தகம் தொகுதி த.வெ.க., வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு என்பது, ஜனநாய படுகொலை எங்கு நடந்தாலும், மக்கள் எழுச்சியாக இருப்பார்கள் என்பதற்கு உதாரணம். பதவி விலகி தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு எதிர்ப்பு இருந்தால் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்ற திருமாவளவன் கருத்தை வழிமொழிகிறேன்.
காங்., கட்சி தலைவராக விஜய் இருக்கிறார் என்ற இடதுசாரிகளின் குற்றச்சாட்டு சரிதான். இந்தியாவில் ராகுல்தான் பிரதமர் வேட்பாளர் என கூறியவர் தி.மு.க., தலைவர் ஸ்டாலின். ஆனால், காங்கிரசார் எங்களுக்கே துரோம் செய்து விட்டனர். காங்., கட்சிக்கு தலைமையில்லாததால், விஜயை புதுச்சேரி கட்சி தலைவராக போட்டுள்ளனர். ஆணித்தரமாக நாங்கள் வெற்றி பெறுவோம் என கூற முடியாது. ஆனால், புதுச்சேரியிலும் புயல் அடிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
