முதுநிலை பல் மருத்துவப் படிப்புகளுக்கான 2ம் கட்ட வரைவு ஒதுக்கீட்டு பட்டியல் வெளியீடு
முதுநிலை பல் மருத்துவப் படிப்புகளுக்கான 2ம் கட்ட வரைவு ஒதுக்கீட்டு பட்டியல் வெளியீடு
ADDED : செப் 23, 2026 09:13 PM
புதுச்சேரி: சென்டாக் முதுநிலை பல் மருத்துவம் எம்.டி.எஸ்., படிப்புகளின் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான இரண்டாம் கட்ட வரைவு ஒதுக்கீட்டுப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
மாணவர்கள் தங்களின் டாஷ்போர்டு உள் நுழைவு விவரங்கள் மூலமாக தங்களுக்கான ஒதுக்கீட்டு விவரங்களைச் சரிபார்த்துக் கொள்ளலாம். இதில் ஏதேனும் ஆட்சேபனைகள் அல்லது புகார்கள் இருந்தால், டாஷ்போர்டில் உள்ள கிரீவன்ஸ் விருப்பத்தைப் பயன்படுத்தி இன்று 24ம் தேதி காலை 11 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
பெறப்பட்ட ஆட்சேபனைகள் பரிசீலிக்கப்பட்ட பின்னரே, இரண்டாம் கட்டத் தற்காலிக ஒதுக்கீட்டுப் பட்டியல் வெளியிடப்படும். தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு ஒதுக்கீட்டுப் பட்டியல் ஒரு தகவல் அறிவிப்பு மட்டுமே தவிர, இதைக் கொண்டு கல்லுாரிகளில் ஒதுக்கீட்டு உரிமையைக் கோர முடியாது என, சென்டாக் நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.
தற்காலிக ஒதுக்கீட்டுப் பட்டியல் வெளியாகி, அதற்கான தற்காலிக சேர்க்கை ஆணையை பதிவிறக்கம் செய்த பிறகே மாணவர்கள் ஒதுக்கப்பட்ட கல்லுாரிகளை அணுக வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதுகுறித்த விவரங்கள் மாணவர்களுக்கு எஸ்.எம்.எஸ்., மூலமாகவும் அனுப்பப்பட்டுள்ளன. கூடுதல் விவரங்களுக்கு சென்டாக் இணையதளத்தைப் பார்வையிடலாம் அல்லது உதவி எண்களான 0413-2655570, 2655571 மூலம் தொடர்பு கொள்ளலாம் என, சென்டாக் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.
