sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

புதுச்சேரியை புரட்டி போட்ட பெஞ்சல் புயல்  ஒரே நாளில் 50 செ.மீ., மழை கொட்டியது நீரில் மூழ்கி 5 பேர் பலி: மீட்பு பணியில் ராணுவம்

/

புதுச்சேரியை புரட்டி போட்ட பெஞ்சல் புயல்  ஒரே நாளில் 50 செ.மீ., மழை கொட்டியது நீரில் மூழ்கி 5 பேர் பலி: மீட்பு பணியில் ராணுவம்

புதுச்சேரியை புரட்டி போட்ட பெஞ்சல் புயல்  ஒரே நாளில் 50 செ.மீ., மழை கொட்டியது நீரில் மூழ்கி 5 பேர் பலி: மீட்பு பணியில் ராணுவம்

புதுச்சேரியை புரட்டி போட்ட பெஞ்சல் புயல்  ஒரே நாளில் 50 செ.மீ., மழை கொட்டியது நீரில் மூழ்கி 5 பேர் பலி: மீட்பு பணியில் ராணுவம்


ADDED : டிச 02, 2024 04:56 AM

Google News

ADDED : டிச 02, 2024 04:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரியை புரட்டி போட்ட பெஞ்சல் புயல் மழையில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். ஒரே நாளில் கொட்டிய வரலாறு காணாத 50 செ.மீ., மழையால் ஒட்டுமொத்த புதுச்சேரியே மழை வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது.

பெஞ்சல் புயல் காரணமாக நேற்று முன்தினம் காலை முதல் மழை பெய்ய துவங்கியது. இரவு முழுதும் விடிய விடிய சூறை காற்றுடன் கன மழை கொட்டி தீர்த்தது. புதுச்சேரி முழுதும் வெள்ளக்காடாக மாறியது.

நேற்று முன்தினம் காலை 8:30 மணி முதல் நேற்று காலை 8:30 மணி வரை, 48.4 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.

புதுச்சேரியில் கடந்த 2021 பிப். 14ம் தேதி 17 செ.மீ., கடந்த 2022ம் ஆண்டு டிச., 31ம் தேதி அதிகபட்மாக 21 செ.மீ., மழை பதிவானது. அதற்கு பிறகு புதுச்சேரியில் கடந்த 30 ஆண்டு வரலாற்றில் நேற்று ஒரே நாளில் தற்போது 48.4 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. காலை 8:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை 1.6 செ.மீ., மழை பதிவானது. ஒட்டுமொத்தமாக நேற்று காலை 8:30 மணி முதல் நேற்று மாலை வரை 50 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.

மறைமலையடிகள் சாலை, வெங்கடசுப்பா சிலை, இந்திரா காந்தி சிலை, மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை, புஸ்சி வீதி, ரெயின்போ நகர், தென்னஞ்சாலை, வெங்கடேஸ்வரா நகர், ஜீவா நகர் என பெரும்பலான நகர்கள் அனைத்திலும் 4 முதல் 5 அடி வரை தண்ணீர் தேங்கியதுடன் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே முடியாமல் முடங்கினர்.

சூறை காற்று காரணமாக ஏராளமான மின் கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள் முறிந்து விழுந்ததுடன், துணை மின் நிலையங்களில் மழைநீர் புகுந்ததால் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது.கிராமப்புறங்களில் குடிசை வீடுகள், விவசாய நிலங்களை மழைநீர் சூழ்ந்தது.

நகர பகுதியில் பல்வேறு நகர்களில் 5 அடிக்கு மேல், மழைநீர் தேங்கியதால், குடியிருப்புவாசிகள் முதல் தளத்திற்கு சென்றனர். மழைவெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க கலெக்டர் குலோத்துங்கன் ராணுவத்திற்கு அழைப்பு விடுத்தார்.

அதன்பேரில், சென்னை கேரிசன் பெட்டாலியன் ராணுவ பிரிவுவைச் சேர்ந்த மேஜர் சங்வான் தலைமையில் 68 பேர் கொண்ட ராணுவத்தினர் நேற்று அதிகாலை 5:30 மணிக்கு புதுச்சேரி வந்தடைந்தனர். வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்பு படகுகள் மூலம் பொதுமக்களை மீட்கும் பணியில் ஈடு பட்டு வருகின்றனர்.

5 பேர் பலி


கன மழைக்கு முதலியார்பேட்டை, தியாகு முதலியார் நகர், பாணிபூரி கடைக்காரர் ராஜி, 29; கோவிந்த் சாலை ஆட்டோ டிரைவர் முருகேசன், 60; உழந்தை கீரப்பாளையம் செல்வக்குமார், 53; ஆகியோர் இறந்தனர். ஒதியஞ்சாலையில் அடையாளம் தெரியாத 45 வயது நபர், மேட்டுப்பாளையம் ஐ.டி.ஐ., அருகே 45 வயது அடையாளம் தெரியாத நபரின் உடல்கள் மீட்கப்பட்டன.

நேற்று மழையில் தத்தளித்தவர்கள் 177 பேர் மீட்கப்பட்டு, மொத்தம் 551 பொது மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 54 ஆயிரத்து 700 பேருக்கு உணவு மற்றும் ரொட்டி வழங்கப்பட்டது.

மழையில் இதுவரை 20 குடிசை வீடுகள், 4 கல் வீடுகள் சேதம் அடைந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதுச்சேரி முழுதும் 50 ஆயிரம் வீடுகளை மழைநீர் சூழ்ந்தது.






      Dinamalar
      Follow us