/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
/
புதுச்சேரியில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
ADDED : ஆக 19, 2025 07:49 AM
புதுச்சேரி : வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலியால் புதுச்சேரி-காரைக்கால் துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
ஆந்திர பிரதேசம்-தெற்கு ஒடிசா கடற்கரைகளில் நேற்று மாலை உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த மண்டலமாக மாறியது. இது ஒடிசா மாநிலம் கோபால்பூரின் அருகே 40 கி.மீ தொலைவிலும், ஆந்திரபிரதேசம் கலிங்கப்பட்டினத்திற்கு வடகிழக்கே 110 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
இன்று அதி காலை வடமேற்கு நோக்கி நகர்ந்து, தெற்கு ஒடிசா-வடக்கு ஆந்திரப் பிரதேசம் வழியாக கோபால்பூருக்கு (ஒடிசா) தெற்கே கடக்கும். இதன் காரணமாக புதுச்சேரி, காரைக்கால் துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.