ADDED : செப் 22, 2026 06:01 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி மற்றும் காரைக்கால் துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
மத்திய மேற்கு வங்க கடலில், உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது, ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக மாறி உள்ளது. இது ஆந்திரா, ஒடிசா பகுதிகளில் புயலாக மாற வாய்ப்புள்ளது. இதனை குறிக்கும் வகையில் புதுச்சேரி துறைமுகத்தில் ஒன்றாம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்பட்டுள்ளது.
இதேபோன்று காரைக்கால் தனியார் துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
மேலும் கடல் பகுதியில் காற்றின் வேகம் மற்றும் கடல் சீற்றம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதால், மீனவர்கள் மற்றும் கடலில் செல்லும் படகுகள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
