தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ டயரை மாற்ற முடியாமல் ஆம்புலன்ஸ் ஓரங்கப்பட்டுள்ள அவலம்

டயரை மாற்ற முடியாமல் ஆம்புலன்ஸ் ஓரங்கப்பட்டுள்ள அவலம்

டயரை மாற்ற முடியாமல் ஆம்புலன்ஸ் ஓரங்கப்பட்டுள்ள அவலம்


ADDED : செப் 22, 2026 06:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 22, 2026 06:01 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

 புதுச்சேரி: கரிக்கலாம்பாக்கம் சமுதாய நலவழி மையத்தில், டயரை மாற்ற முடியாமல் ஆம்புலன்ஸ் ஓரங்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  புதுச்சேரி பொது மருத்துவமனைக்கு அடுத்து, கரிக்கலாம்பாக்கம் சமுதாய நல வழி மையம் முக்கியமானதாக உள்ளது. 

கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் இந்த மருத்துவமனையில், கரிக்கலாம்பாக்கம், கோர்க்காடு, உருவையாறு, ஏம்பலம், மற்றும்  சுற்றியுள்ள தமிழகப் பகுதிகளை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 ஒரு காலத்தில் பிரசவம், அறுவை சிகிச்சை என சகல வசதிகளுடன் இயங்கிவந்த இம்மையத்தில், வசதிகள் குறைவாக உள்ளதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். சிகிச்சைக்கு வருபவர்கள் பெரும்பாலும்,  புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கே பரிந்துரைக்கப்படுகின்றனர்.மேல்சிகிச்சை மற்றும் அவசரகால தேவைகளுக்கு புதுச்சேரிக்கு நோயாளிகளை விரைவாக அழைத்து செல்ல ரோட்டரி சங்கம் சார்பில் இம்மையத்திற்கு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஆம்புலன்ஸ் ஒன்று வழங்கப்பட்டது.   இதுதவிர, தேசிய சுகாதார இயக்கம் சார்பில், 108 ஆம்புலன்ஸ் ஒன்றும் உள்ளது.  ரோட்டரி சங்கம் வழங்கிய ஆம்புலன்ஸின் டயர் பழுதாகி கடந்த பத்து நாட்களுக்கு மேல் இயங்காமல் உள்ளது. ஆனால் டயரை கூட மாற்றாமல் அதிகாரிகள் அலட்சியமாக உள்ளதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதனால்,  அவசர சிகிச்சைக்கு புதுச்சேரி செல்ல வேண்டிய நோயாளிகள், 108 ஆம்புலன்ஸ் வரும் வரை காத்திருக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. அங்குள்ள 108 ஆம்புலன்ஸ் வேறு ஏதேனும் அழைப்புக்குச் சென்றுவிட்டால்,  அருகில் உள்ள ஆம்புலன்ஸ் வரும்வரை நிலை உள்ளது. .

நோயாளி உயிருக்குப் போராடும் அவசர நேரத்தில், ஒரு டயரை மாற்றக் கூட நிதியில்லையா அல்லது அதிகாரிகளுக்கு மனமில்லையா  என கேள்வி எழுப்பும் அப்பகுதி மக்கள் கொந்தளிப்பில் போராட்டத்திற்கு ரெடியாகி வருகின்றனர். 

இனியாவது சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் விழித்துக் கொண்டு, உடனடியாக ஆம்புலன்ஸக்குப் புதிய டயர்களைப் பொருத்தி, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us