தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ உயிர் உள்ளவரை உழைப்பேன் என்.ஆர். காங்., வேட்பாளர் உறுதி

உயிர் உள்ளவரை உழைப்பேன் என்.ஆர். காங்., வேட்பாளர் உறுதி

உயிர் உள்ளவரை உழைப்பேன் என்.ஆர். காங்., வேட்பாளர் உறுதி


ADDED : செப் 22, 2026 05:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 22, 2026 05:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி தொகுதி எல்லையம்மன் நகரில் நடந்த இடைத்தேர்தல் தொடர்பான மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், என்.ஆர்.காங்., வேட்பாளர் அசோக் ஆனந்த், ‘என் உயிர் உள்ளவரை, உங்களுக்காக உழைப்பேன் என உறுதியளித்தார். 

புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு எல்லையம்மன் நகர்,  எல்லையம்மன் கோவில் வளாகத்தில் என்.ஆர்.காங்., சார்பில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.

நிகழ்ச்சியில், தட்டாஞ்சாவடி தொகுதி வேட்பாளர் அசோக் ஆனந்த் கலந்து கொண்டு பொது மக்களிடம் ஓட்டு சேகரித்தார். 

அப்போது, அவர் பேசுகையில், தனது நீண்டகால மக்கள் சேவைகள், மக்கள் பணிகளை எடுத்துரைத்தார். மேலும், தொகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்து, அவற்றை நிறைவேற்ற தொடர்ந்து பாடுபடுவேன். தொடர்ந்து, “என் உயிர் உள்ளவரை என்னால் முடிந்த உதவிகளை உங்களுக்காக செய்வேன், உங்களின் தேவைகளுக்கு எப்போதும் முன்னுரிமை அளித்து, உங்கள் நலனுக்காக தொடர்ந்து உழைப்பேன் என உறுதியளித்தார். ஆகையால், இடைத்தேர்தலில் பொதுமக்கள் அனைவரும் ‘ஜக்கு’ சின்னத்திற்கு ஓட்டு அளிக்குமாறு கேட்டுக்கொண்டனர். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us