ADDED : செப் 22, 2026 05:01 PM
புதுச்சேரி: முத்திரையர்பாளையம், அருட்செல்வி ஆயி அம்மாள் அரசு பெண்கள் நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவியர் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
25 ஆண்டுகள் முன் பள்ளிப் பருவ நினைவுகளை மீண்டும் புதுப்பிக்கும் வகையில் நடந்த நிகழ்ச்சியில் 150க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளியில் ஒன்றுகூடிய முன்னாள் மாணவியர், தங்களுடன் பயின்ற தோழிகளையும், தங்களுக்கு பாடம் கற்பித்த ஆசிரியர்களையும் சந்தித்து பள்ளிப் பருவத்தின் இனிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.
விழாவில் ஆசிரியர்கள் ஜெயசூர்யா, ராமநாதன், மணிமொழி, சிவகணபதி, அண்ணாமலை, விநாயகம், குப்புசாமி, சுலோச்சனா, லட்சுமிகாந்தம், சாந்தி, அனிதா, சிவசங்கரி ஆகியோர் பங்கேற்றனர்.
முக்கிய நிகழ்வாக பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடுதல் மற்றும் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
